ஸ்ரீவைகுண்டம். டிசம்பர் 19 நவதிருப்பதிகளில் ஒன்பதாவது ஆன ஆழ்வார்திருநகரி சதுர்வேதி மங்கலத்தில் இராமானுசரின் ஆசாரியரான பெரிய நம்பிக்கு தனி சன்னதி உள்ளது. இராமானுசரின் ஆசாரியரான பெரிய நம்பி மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் அவதாரம் செய்தார்.
அவரது அவதார தினமான இன்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம்.8 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி. 8.30 மணிக்கு திருமஞ்சனம்.9 மணிக்கு அலங்காரம் தீபாராதனை . 10 மணிக்கு நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பெரிநம்பி சம்பத் ஸ்வாமி. பெரிய நம்பி ரெங்க ராமானுஜம் ஸ்வாமி கோவிந்தன். ரகு ராம் கிருஷ்ணன். முத்தப்பன். சீனிவாசன். அரவிந்தன். பெரிய திருவடி. பாலாஜி ஆகியோர் சேவித்தனர்.
சாத்துமுறை கோஷ்டி நடந்து தீர்த்தம். சடாரி. பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சாயரட்சை. 6 மணிக்கு கோஷ்டி நடந்தது. நம்மாழ்வார் சன்னதி பிரசாதம் பெரியநம்பிக்கு சாத்தப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை ராஜப்பா வெங்கடாச்சாரி. சந்தான கோபாலன். நாராயணன் ஆகியோர் செய்து இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக