நெமிலி ஊராட்சி ஒன்றியம் - கடம்ப நல்லூர் கிராமத்தில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி - ஒன்றிய சேர்மன் ஆய்வு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 27 டிசம்பர், 2025

நெமிலி ஊராட்சி ஒன்றியம் - கடம்ப நல்லூர் கிராமத்தில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி - ஒன்றிய சேர்மன் ஆய்வு!

நெமிலி ஊராட்சி ஒன்றியம் - கடம்ப நல்லூர் கிராமத்தில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி - ஒன்றிய சேர்மன் ஆய்வு!
ராணிப்பேட்டை , டிச 27 -

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாங் காட்டுச்சேரி ஊராட்சி, கடம்பநல்லூர் கிராமம் போஸ்ட் ஆபீஸ் தெரு மற்றும் பிள்ளையார் கோவில் தெருவில், சாலை மிகவும் மோசமடைந்து பழுதடைந்துள் ளதால் அப்பகுதியின் ஒன்றிய குழு உறுப்பினர் வரலட்சுமி அசோக்குமார் அவர்கள், சாலையை சீரமைத்து தரக் கோரி ஒன்றிய குழு கூட்டத்தில் கோரிக் கை வைத்திருந்தார். அதன் அடிப்படை யில் கடம்பநல்லூர் பிள்ளையார்கோவில் தெரு மற்றும் போஸ்ட் ஆபீஸ் தெருக் களில் ரூபாய் 10 இலட்சம் ஒன்றிய பொது நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு, சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதனை, நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்கக்கோரி ஒப்பந்ததாரரிடம் தெரிவித்தார். அப்போது கடம்பநல்லூர் ஒன்றிய குழு உறுப்பினர் வரலட்சுமி அசோக்குமார், சயனபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பவானி வடிவேலு, பிரகாஷ், புருஷோத்தமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad