ஜாக்டோ-ஜியோ பேரமைப்பினர் உரிமை மீட்பு கால வரையற்ற வேலை நிறுத்த ஆயத்த மாநாடு !
வேலூர் , டிச 27 -
வேலூர் மாவட்டம் ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் வேலூர் மாவட்டத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களின் 2021 தேர்தல் காலவாக்குறுதியின் படி லட்சக்கணக்கான அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப்பணியளார்களின் வாழ் வாதார கோரிக்கைகளான பழைய ஓய்வூ திய திட்டம் உள்ளிட்ட 10அம்ச கோரிக்கை களை நிறைவேற்றிட வலியுறுத்தி வேலூர் மாவட்ட தலைநகரில் உரிமை மீட்பு வேலைநிறுத்த ஆயத்த மாநாடு வேலூர் பெல்லியப்பா கட்டிடத்தில் கூட்ட அரங்கில் 27.12.2025 காலை 10 மணி முதல் பிற்பகல் 2.00 மணிவரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எம்.ஜெய காந்தன் ,எம்.எஸ்.தீனதயாளன்ஆ.ஜோசப் அன்னையா, ஜி.சீனிவாசன், என் சக்கேயு சத்திய குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அனைத் துறை ஒய்வூதியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பி.கிருஷ்ணமூர்த்தி மாநாட்டினை தொடக்கி வைத்து பேசி னார். மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி யின் கே.வி.ரக்ஷித் சிறப்புரையாற்றி னார். மாநில உயர்மட்டக்குழு உறுப்பி னர்கள் செ.நா.ஜனார்த்தனன், அ. சேகர், அக்ரி.எ.இராமன், துரை.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத்தலைவர் எஸ்.ரஞ்சன்த யாளதாஸ், மாவட்ட உயர்மட்டக்குழு நிர்வாகிகள் எம்.எஸ்.செல்வகுமார், ஆர்.ஜெயக்குமார், ஜி.டி.பாபு சோகா ராமன், பெ.இளங்கோ, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பா.வேலு, வருவாய் துறை அலுவலர் சங்க வி.ரமேஷ், தே.வேந்தன் மு.இளந் தமிழன் எஸ்.ஜோதி எம்.ஏழுமலை ம.தேவசேனன், ஆதிகேசவன், துரைராஜ், உள்ளிட்ட ஆசிரியர் அரசு ஊழியர் பணி யாளர் சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள் பேசினர்.
பின்வரும் தீர்மானங்கள் நிறை வேற்றப் பட்டன.
1.வேலூர் மாவட்டத்தில் பணியிலிருக்கும் 8000 ஆசிரியர் அரசு ஊழியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஜனவரி-6ஆம் தேதி முதல் கால வரை யற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பது என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.2.டிசம்பர் 29ஆம் தேதி முதல் ஜனவரி 4ஆம் தேதி வரை வேலைநிறுத்த பிரச்சார இயக்கங்களை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. 3.ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனே நிறைவேற்றிட கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக