திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மகாராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அதில் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் அளித்துள்ள மனுவின் விபரம்
மதுக்கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூலித்தால் மதுக்கடை ஊழியர்கள் கூண்டோடு சஸ்பெண்ட் செய்ய வேண்டுமென கடந்த நவம்பர் 2024 ல் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் தற்போது வரை எவ்வித முறையான நடவடிக்கை எடுக்காததால் தொடர்ச்சியாக பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூலித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர் ( டி எஸ் ஓ ) அவர்களிடம் நுகர்வோர் அமைப்புகள் சார்பாக நுகர்வோர்களின் அத்தியாவசிய பிரச்சனைகள் உரிமைகள் தொடர்பாக நேரிடையாக பேசிய போது ( டி எஸ் ஓ ) இதையெல்லாம் கேட்பீர்கள் ஏன் மதுக்கடைகளில் தொடர்ச்சியாக பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூலித்து வருவதை கேட்பதில்லை அதுவும் நுகர்வோர் விதிகளை மீறிய செயலாக தான் உள்ளது என தெரிவித்தார் அதன்படி ( டி எஸ் ஓ ) அவர்களின் வலியுறுத்தலின் படி இந்த மனு அளிக்கப்படுகிறது.
மதுக்கடைகளில், பாட்டிலுக்கு கூடுதலாக, 10 ரூபாய் அல்லது அதற்கு மேல் விலை வைத்து விற்கும் பணியாளர் மீது அரசாங்க உத்தரவுபடி நடவடிக்கை எடுப்பதுடன், மேற்பார்வையாளர் உட்பட அனைவரையும் சஸ்பெண்ட் செய்வதை உறுதிசெய்ய வேண்டும்.
இது தொடர்பாக ஏற்கெனவே அனைத்து மாவட்டத்திலுள்ள மேலாளர்களுக்கும் தமிழ்நாடு 'டாஸ்மாக்' நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஏற்கெனவே டாஸ்மாக் நிர்வாகம், மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை சமீப காலமாக மதுக் கடைகளில் தொடர்ந்து கூடுதல் விலை வைத்து விற்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதை தடுக்க, மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக, 10 ரூபாய் அல்லது அதற்கு மேல் விலை வைத்து விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அக்கடை பணியில் உள்ள மேற்பார்வையாளர் உட்பட அனைவரையும் கூட்டு பொறுப்பாக்கி, அவர்களை உடனே தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும்.கூடுதல் விலைக்கு மது விற்றால், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகளை, அனைத்து மண்டல, மாவட்ட மேலாளர்களும், சிறப்பு பறக்கும் படை அதிகாரிகளும், தவறாது கடைபிடிக்க வேண்டுமென அதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இது போன்ற உத்தரவுகள் டாஸ்மாக் கடைகளில் எப்போதுமே காற்றில் பறப்பதாகவே இருந்து வருகிறது.
இது குறித்து விளக்கம் கேட்டால் தான் அதிகாரிகளுக்கு தருவதற்காக வசூலிப்பதாகவும், யாரிடம் வேண்டுமென்றாலும் புகார் தெரிவிக்கலாம் எனும் அலட்சியத்துடன் பதில் அளிப்பதாக மதுபிரியர்கள், ஊழியர்கள் மீது குற்றம் சாட்டி உள்ளனர்.
எனவே உடனடியாக மாவட்ட பகுதிகளிலுள்ள அனைத்து மதுக்கடைகளிலும் பாட்டிலுக்கு கூடுதலாக, 10 ரூபாய் வசூலிப்பதை முழுமையாக தடைசெய்து உரிய ரசீதுடன் அரசு நிர்ணயம் செய்த எம் ஆர் பி விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்வதை உறுதிப்படுத்த வேண்டுமென திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறாக அதில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக