உழவர் பெருந்தலைவர் சி .நாராயணசாமி நாயுடு அவர்கள் 41 வது நினைவேந்தல் நிகழ்ச்சி தலைவர் ஜிகே விவசாய மணி அறிக்கை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 22 டிசம்பர், 2025

உழவர் பெருந்தலைவர் சி .நாராயணசாமி நாயுடு அவர்கள் 41 வது நினைவேந்தல் நிகழ்ச்சி தலைவர் ஜிகே விவசாய மணி அறிக்கை


அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் 21-12-2025 ஞாயிற்று கிழமை அன்று  உழவர் பெருந்தலைவர் சி நாராயணசாமி நாயுடு அவர்களின் 41 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி மாபெறும் வாகன பேரணியுடன் நடைபெற  உள்ளது   இந்த நிகழ்ச்சி வருடம் தோறும் ராணுவ கட்டுப்பாடுடன் நடைபெற்று வருகிறது இந்த 41 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியும் ராணுவ கட்டுப்பாடுடன் நடத்த வேண்டும் என அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஜி கே விவசாய மணி (எ) ஜி. சுப்பிரமணியம் அவர்கள் நிர்வாகிகளை கேட்டு கொண்டுள்ளார் சங்க பேரணியில் விதிமுறைகள் கடைபிடிக்க கீழ்க்கண்ட விதிமுறைகளை தெரிவித்துள்ளார் சங்க பேரணியின் போது அவசரப்பட்டு ஒருவரை ஒருவர் முந்தி கொண்டு வாகனங்களில் செல்ல வேண்டாம் அனைவரும் கட்டாயம் பச்சை துண்டு அணிந்து வர வேண்டும் மற்றும் ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் அனைவரிடம் தண்ணீர் பாட்டில் இருக்க வேண்டும் வாகனங்களில் சங்க ஸ்டிக்கர் மற்றும் கொடிகள் கட்டி இருக்க வேண்டும் பேரணியின் போது சாலையின் இடது புறம் மட்டும் செல்ல வேண்டும் அதிக இடைவெளியை விட்டு வருவதை தவிர்க்க வேண்டும் மற்ற வாகனங்களை முந்தி செல்ல கூடாது அவசர உதவிக்காக பாதுகாப்பு குழுவினர் தயாராக இருப்பார்கள் அதனால் முதல் உதவி தேவைப்படும்போதும் வேறு உதவிகள் தேவைப்படுபவர்கள் பாதுகாப்பு குழுவினரை அணுகலாம் இந்த நிகழ்ச்சியில் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் குடும்பத்தோடு கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தலைவர் ஜி கே விவசாய மணி (எ) ஜி சுப்பிரமணியம் அவர்கள் தனது அறிக்கையில் கூறியுள்ளார்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad