திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கரையூர், வீராச்சிமங்கலம், ரெட்டாரவலசு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் பணியாற்றி வந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தங்களது கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
இந்த இணைப்பு விழா, அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. புதியதாக இணைந்த அனைவரையும் அமைச்சர்கள் வரவேற்று, கட்சி வளர்ச்சிக்காக இணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் நான்காம் மண்டல தலைவரும், திருப்பூர் திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான இ.ல.பத்மநாபன், தாராபுரம் நகர செயலாளர் சு.முருகானந்தம், முன்னாள் துணைத் தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திமுக ஒன்றிய செயலாளர் கே.கே.துரைசாமி செய்திருந்தார்.
இணைப்பு விழா நிறைவில், கலந்து கொண்ட அனைவருக்கும் சைவம் மற்றும் அசைவம் என இருவகை உணவுகள் பரிமாறப்பட்டன.
தாராபுரம் பகுதியில் திமுகவின் செல்வாக்கு மேலும் வலுப்பெறும் வகையில் இந்த இணைப்பு விழா அமைந்ததாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக