எனது உரிமைகள் எனக்கானது அறக்கட்டளை (MRM Foundation)சார்பில் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி!!!* - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 18 டிசம்பர், 2025

எனது உரிமைகள் எனக்கானது அறக்கட்டளை (MRM Foundation)சார்பில் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி!!!*



பொள்ளாச்சி எனது உரிமைகள் எனக்கானது அறக்கட்டளை (MRM   Foundation) சார்பில் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எனது உரிமைகள் எனக்கானது அறக்கட்டளை (MRM   Foundation)  நிறுவனர் திருநங்கை.திருமிகு. ஸ்ரீ வீணா யாழினி முருகேசன் தலைமை வகித்தார் 


சிறப்பு விருந்தினர்களாக பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனா பிரியா அவர்கள், பொள்ளாச்சி நியமன நகர மன்ற உறுப்பினர் கவிஞர் முருகானந்தம், முதலுதவி சமூக நல அறக்கட்டளை நிறுவனர் முனைவர் அபு இக்பால், பொள்ளாச்சி நுகர்வோர் அமைப்பு தலைவர் இந்திராணி, ஈமச்சடங்கு அறக்கட்டளை இயக்குனர் பரமேஸ்வரன், நேதாஜி இளைஞர் பேரவை நிறுவனர் வெள்ளை நடராஜ், சமூக செயல்பாட்டாளர் கலைவாணி, சந்திப்போம் பாசிட்டிவ் வெல்ஃபேர் சொசைட்டி செயலாளர் சுமதி திருநங்கை செயல்பாட்டாளர் மூத்த திருநங்கை ராஜிம்மா ஆகியோர் கலந்து கொண்டனர் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை  மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad