அறிவியல் இயக்கம் கணியம் பாடி மற்றும் குடியாத்தம் ஒன்றிய 19வது மாநாடு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 14 டிசம்பர், 2025

அறிவியல் இயக்கம் கணியம் பாடி மற்றும் குடியாத்தம் ஒன்றிய 19வது மாநாடு !

அறிவியல் இயக்கம் கணியம் பாடி மற்றும் குடியாத்தம் ஒன்றிய 19வது மாநாடு !
வேலூர் , டிச 14 -

வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கணியம்பாடி ஒன்றிய கிளையின் 19வது மாநாடு கணியம்பாடி ஒன்றியம் பாலாத்து வண்ணான்ஊராட்சி நர்சரி நாற்றுப்பணைணை வளாகத்தில் நடை பெற்றது.  கிளை  மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் ஊராட்சி மன்ற தலை வர் எம்.வெங்கடேசன் தலைமை தாங்கினார்.  ஒன்றிய குழு உறுப்பினர் கோ.தங்கம்மாள் கோவிந்தன் ஊராட்சி துணைத்தலைவர் து.சாந்தி துரைக் கண்ணு ஆகியோர் முன்னிலை வகித் தனர் மாவட்ட துணைத்தலைவர் கே.விஸ்வநாதன் சிறப்புரையாற்றினார்.
வேலூர் மாவட்ட செயலாளர் முனைவர்.செ.நா.ஜனார்த்தனன் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார். 
ஒன்றிய தலைவர் எம்.காசிநாதன் தொடக்கஉரையாற்றினார்.  ஒன்றிய செயலாளர் செயலர் அறிக்கை சமர்பித்து பேசினார்.  ஒன்றிய பொருளாளர் டி.விஜயகுமாரி வரவு செலவு அறிக்கை சமர்பித்து பேசினார்.மாவட்ட நிர்வாக் க்குழு உறுப்பினர் பெ.ராமு, மாவட்ட இணை செயலாளர் எ.பாஸ்கர் ஆகியோர் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர்.  நாற்றுப்பண்ணையில் புதிய மரக்கன்று களை மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார் த்தனன் நட்டார்.தமிழ்நாடு அறிவியல் இயக்க குடியாத்தம் கிளையின் கிளை மாநாடு குடியாத்தம் வெங்கடேஸ்வரா தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. 
ஆசிரியர் கோ தினகரன்  தலைமை உரையாற்ற வி பழனி வரவேற்புரை நல்க பேராசிரியர் து ரகுராமன் பேராசிரியர் ஆர். காயத்ரி பட்டதாரி ஆசிரியர் ஏரி கிருஷ்ணன் முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆ. ஜெனிவா ஆகியோர் தற்கால அறிவியல் பாதிப்பினை உருவாக்கும் கட்டுரைகளை குறித்து உரையாற்றினர். நல் நூலகர் ஆ.ச. மதன்  செயலாளர் அறிக்கை வாசிக்க பேராசி ரியர் வே. விநாயகமூர்த்தி அவர்கள் பொருளாளர் அறிக்கையை சமர்ப்பிக்க உறுப்பினர்கள் யாவரும் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டனர். பின்பு கிளை மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. வேலூர் மாநகர அறிவி யல் இயக்க செயலாளர் முத்து சிலுப்பன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.  புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி கவிஞர் முல்லைவாசன் அவர்கள் நிறை வுறை ஆற்றினார். கிளை மாநாட்டில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் என் மைவண்ணன்  வி ஏ விஜய் ஆனந்த்  வி ஆர் நபீஸ் அகமது  கோ ஜெயவேலு  கல்லூரி மாணவர் ம. சேஷாத்திரி  இளநிலை உதவியாளர் ருக்மாங்கதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad