தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நாகர்கோவில் மாநகரம் கடந்த 1.3.2019 அன்று மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 49.10 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நாகர்கோவில் மாநகரம் குறுகிய சாலைகள் கொண்டதாக அமைந்துள்ளது.
சாலைகள் விரிவாக்கம் செய்யப்படாததால் நாகர்கோவிலில் சில சாலைகளில் 1 மணி நேரம் வரை வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர்.
காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெருக்கடி அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து ஒழுகினசேரி வழியாக செல்லும் சாலை,வடசேரி முதல் வேப்பமூடு செல்லும் சாலை,அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து கோட்டாறு காவல் நிலையம் வழியாக மீனாட்சிபுரம் செல்லும் சாலை, அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து கோட்டாறு வழியாக செட்டிகுளம் செல்லும் சாலை,
கோட்டாறு சவேரியார் கோயில் சந்திப்பில் இருந்து பறக்கை ரோடு சந்திப்பு வரையிலும் கோட்டாறு சந்திப்பு முதல் பீச்ரோடு சந்திப்பு இந்து கல்லூரி வழியாக செட்டிகுளம் செல்லும் சாலை, உள்ளிட்ட மேலும் பல சாலைகள் குறுகிய சாலைகளாக உள்ளன.
இப்போது பெருகிவிட்ட மக்கள் தொகை மற்றும் அதிகரித்து வரும் போக்குவரத்து வாகனங்கள் ஆகியவற்றால் குறுகிய சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்ப்பட்டு வாகனங்கள் சிக்குகின்றன. இதனால் விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது.
எனவே நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள சாலைகளை விரிவாக்கம் செய்வது அவசியமாக உள்ளது. குறுகிய சாலைகள் அமைய பல இடங்களில் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களும் முக்கியமாக உள்ளது.
எனவே அனைத்து சாலைகளையும் 80 அடி முதல் 100 அடி சாலைகளாக மாற்றி இருபுறமும் வாகனங்கள் நெருக்கடி இல்லாமல் செல்ல வழி வகை செய்ய வேண்டும். சாலை விரிவாக்க பணிகளை தொடங்குவதற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
அதேபோன்று எதிரெதிரே வரும் வாகனங்கள் சிரமம் இன்றி செல்ல சாலை நடுவில் சென்ட்ரல் மீடியன் தடுப்பு கல் அமைத்து போக்குவரத்து எளிமையாக்கப்பட வேண்டும். அதேபோன்று மாற்று சாலை வழிகளையும் இப்போதே திட்டமிட்டு எதிர்கால போக்குவரத்து வசதியை கருத்தில் கொண்டு அமைக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் கேட்டுக்கொண்டார்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக