அகப்பைகுளம் அந்திரேயா ஆலயத்தில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் பணியாற்றும் 500 ஆலய பணியாளர்களுக்கான கிறிஸ்துமஸ் வெகுமதி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 14 டிசம்பர், 2025

அகப்பைகுளம் அந்திரேயா ஆலயத்தில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் பணியாற்றும் 500 ஆலய பணியாளர்களுக்கான கிறிஸ்துமஸ் வெகுமதி.

அகப்பைகுளம் அந்திரேயா ஆலயத்தில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் பணியாற்றும் 500 ஆலய பணியாளர்களுக்கான கிறிஸ்துமஸ் வெகுமதி வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. 

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் 6 சபைமன்றங்களில் 128 சேகரங்களில் ஆலயத்தை சுத்தப்படுத்தி ஆலயத்தை பராமரிக்கின்ற குடும்பமாக பணிசெய்கின்ற பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ளவர்களிடம் பெறப்பட்ட, குருவானவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட, 500 நபர்களுக்கு கிறிஸ்துமஸ் வெகுமதி வழங்கும் விழா நடைபெற்றது.

ஆரம்ப ஜெபத்தை சேகரத்தலைவர் பாஸ்கரன் செய்தார். பாடல் வேளையை அகப்பைக்குளம் அந்திரேயா ஆலய பாடகர் குழுவினர்கள்‌ சிறப்பாக செய்து இருந்தனர். 128 சேகரங்களிலிருந்து 500 சபைகளிலிருந்து வந்திருந்த அனைவரையும் ஆலய பரிபாலன பொருளாளர் பொன்ராஜ் வரவேற்றார்.

சேகரதலைவர் பாஸ்கரன் சிறப்பு வாழ்த்து செய்தியை வழங்கினார்.
ஆலய பரிபாலன கமிட்டி அங்கத்தினர்கள் சேகர கமிற்றி அங்கத்தினர்கள் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிகளை திருமண்டல பெருமன்ற உறுப்பினர் ஸ்டிபன் ஞானதுரை தொகுத்து வழங்கினார். பங்கு பெற்றவர்கள் சபை மனறங்களிலுள்ள சேகரங்கள் வாரியாக அழைக்கப்பட்டு அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வெகுமதி மற்றும் கேக் வழங்கப்பட்டது.

உரிய நேரத்தில் விண்ணப்பதாரர்களை நேரில் வர செய்த அனைத்து குருமார்க்கும் கிறிஸ்துமஸ் வெகுமதி வழங்கிய குடும்பங்களுக்கும் விழா ஏற்பாடுகளை மிகவும் நேர்த்தியாக செய்த அனைத்து தன்னார்வளர்களுக்கும், பரிபாலன பொருளாளர் P பொன்ராஜ் மற்றும் அனைத்து கமிற்றி உறுப்பினர்களுக்கும் சேகரதலைவர் பாஸ்கரன் நன்றி கூறி ஜெபித்து ஆசி கூறினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை அகப்பைக்குளம் சேகரத்தலைவர் பாஸ்கரன் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் ஸ்டிபன் ஞானதுரை ஆலயபரிபாலன பொருளாளர் பொன்ராஜ் செயலர் செல்லத்துரை மற்றும் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad