ஸ்ரீவைகுண்டம் டிசம்பர் 14 தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் 5 வது இரட்டை திருப்பதி தேவர் பிரான் கோவில். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் அஸ்தம் நட்சத்திரம் அன்று துவங்கி 11 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்.
அதனை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடந்தது. காலை 7 மணிக்கு விஸ்வரூபம். 8 மணிக்கு நித்தியல் திருமஞ்சனம். அலங்காரம் தீபாராதனை. 9 மணிக்கு உற்சவர் தேவர் பிரான் தாயார்களுடன் முன் மண்டபம் எழுந்தருளினார். 9.15 மணிக்கு கொடி பட்டம் கோவில் சுற்றி வந்தது. கொடிமர பூஜைகள் முடிந்து 10.10 மணிக்கு அர்ச்சகர் சுந்தர்ராஜன் கொடியேற்றினார்
பின்னர் 11.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம். அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. நாலாயிர திவ்வியப் பிரபந்தம் கீழத்திருமாளிகை ராமானுஜன் ஸ்வாமி தலைமையில் சேவித்தனர். சாத்து முறை கோஷ்டி முடிந்து தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
தினசரி மாலை 5 மணிக்கு சாயரட்சை. 5.30 மணிக்கு உற்சவர் தேவர் பிரான் இந்திர விமானம். சிம்ம வாகனம். அனுமான் வாகனம். சேஷ வாகனம். ஆகியவற்றில் கோவிலை சுற்றி வருவார். டிசம்பர் 18 ந்தேதி ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு தேவர் பிரான் மற்றும் செந்தாமரை கண்ணன் கருடசேவை நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் ஸ்தல அர்ச்சகர் ரகு. ஸ்தலத்தார்கள் ஸ்ரீதர் .சந்தானம்.வாசு. நிர்வாக அதிகாரி சதீஷ். ஆய்வாளர் நம்பி. அறங்காவலர் குழு தலைவர் கணேசன் என்ற ராமானுஜன் உறுப்பினர்கள் ராமலட்சுமி. காளிமுத்து. செந்தில். கிரிதரன். கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக