அன்னை தெரசா தொண்டு நிறுவனம் - 20 ஆம் ஆண்டு புத்தாடை வழங்கும் விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 14 டிசம்பர், 2025

அன்னை தெரசா தொண்டு நிறுவனம் - 20 ஆம் ஆண்டு புத்தாடை வழங்கும் விழா.

அன்னை தெரசா தொண்டு நிறுவனம் - 20 ஆம் ஆண்டு புத்தாடை வழங்கும் விழா.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் செவன் டாலர்ஸ் சிறுவர் இல்லத்தில், அன்னை தெரசா தொண்டு நிறுவனம் சார்பில் ஆதரவற்ற குழந்தைகள் மாணவ மாணவிகள் ஆகியோருக்கு புத்தாடை வழங்கினர்.

இந்நிகழ்விற்கு பிரகாசபுரம் பங்குதந்தை ஆரோக்கியராஜ் அருளாசி வழங்கினார். நாசரேத் வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் ஞானையா தலைமை தாங்கினார். நாசரேத் வணிகர் சங்க செயலர் செல்வன், சாலமன் மெட்ரிக் பள்ளி தாளாளர் ஜமீன் சாலமன், வடலிவிளை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் மெர்வின், JJJ ரியல் எஸ்டேட் ஜெகன் கிறிஸ்டோபர், ஜோஷி போர்வெல் ஜோஷி, நாசரேத் பேரூராட்சி துணை தலைவர் அருண் சாமுவேல், காமராசர் ஆதித்தனார் கழக நிர்வாகி ஐஜினஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொண்டு நிறுவன நிர்வாகி செல்வன் வரவேற்புரை வழங்கினார், புனித ஸ்னோவ்ஸ் ரியல் எஸ்டேட் அதிபர் இருதய ஞான ரமேஷ் புத்தாடை வழங்கினர்.

சிறப்பு விருந்தினர்களாக கமலா கலையரசு, கிங்ஸ்டன், நிர்மலாரவி, சகாய ரூபன், அந்தோணி சேவியர் கலந்து கொண்டனர்.

அருட் சகோதரிகள் இன்பெண்டா, வியாகுல ரஞ்சிதம், கிருஷ்ணராஜ், செல்வகுமார், உதுமான் இம்தியாசு, பிரவீன் வாழ்த்துரை வழங்கினர்.

முடிவில் தொண்டு நிறுவன செயலர் காட்வின் அலெக்சு ராஜா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை தொண்டு நிறுவன தலைவர் அந்தோணி ராஜா மற்றும் பலர் சிறப்பாக செய்து இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad