✅ Factcheck : விஜய் – திரிஷா சமீபத்திய பயணம் என பரவும் விமான ஆவணம் போலி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 14 டிசம்பர், 2025

✅ Factcheck : விஜய் – திரிஷா சமீபத்திய பயணம் என பரவும் விமான ஆவணம் போலி.


சமூக ஊடகங்களில், நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா சமீபத்தில் ஒன்றாக விமானப் பயணம் செய்ததாகக் கூறி, ஒரு Passenger Manifest (விமானப் பயணியர் பட்டியல்) ஆவணம் வைரலாக பரவி வருகிறது. இந்த ஆவணம் 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாத பயணம் எனக் கூறப்பட்டு, பல்வேறு ஊகங்களுடனும் கருத்துகளுடனும் பகிரப்பட்டு வருகிறது.


இந்த தகவல் தொடர்பாக Fact Check Desk மேற்கொண்ட விரிவான ஆய்வில், சமூக ஊடகங்களில் பரவும் இந்த ஆவணம் தவறானது, போலியாக திருத்தப்பட்டது என்பது உறுதியாகியுள்ளது. கடந்த ஆண்டு பயண ஆவணம் என்பதில் உறுதி

ஆய்வின் போது, வைரலாக பரவும் Passenger Manifest ஆவணத்தில் இடம்பெற்றுள்ள விமான நிறுவனம், விமான எண், பயண பாதை, விமானக் குழுவினர் (Crew List) மற்றும் பயணிகள் பட்டியல் ஆகிய அனைத்தும் கடந்த ஆண்டு வெளியான ஒரு பயண ஆவணத்துடன் முழுமையாக ஒத்துப்போகும் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது.


இந்த பயணம், கடந்த ஆண்டு நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா மேற்கொண்ட பயணத்தின் விவரங்களைக் கொண்டது என்பதும் தெரியவந்துள்ளது. அந்த நேரத்தில் தொடர்புடைய பயண தகவல்கள் ஊடகங்களில் வெளியான நிலையில், தற்போது அதே ஆவணத்தை எடுத்து ஆண்டு மற்றும் தேதியை மட்டும் மாற்றி, புதிய பயணம் போல திருத்தி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

ஆண்டு மாற்றம் மட்டுமே – மற்ற விவரங்கள் அப்படியே உள்ளது. வைரலான படத்தில்,

  • பயணிகள் பெயர்கள்
  • விமானக் குழுவினர் விவரங்கள்
  • கையொப்பங்கள்
  • விமான நிலைய மற்றும் CISF முத்திரைகள்
  • NIT எண் உள்ளிட்ட தொழில்நுட்ப விவரங்கள்


எல்லாம் அப்படியே இருப்பதும், தேதி மட்டும் 2024-இல் இருந்து 2025 என மாற்றப்பட்டிருப்பதும் தெளிவாகக் காணப்படுகிறது. ஒரு ஆண்டு இடைவெளியில் தயாரிக்கப்படும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் இவ்வாறு முழுமையான ஒற்றுமை இருப்பது நடைமுறையில் சாத்தியமற்றது என்பதால், இது ஒரே ஆவணத்தை திருத்தி பயன்படுத்திய செயல் என Tamilagakural Fact Check Desk தெரிவிக்கிறது.


மேலும், இந்த பயணம் தொடர்பாக எந்த விமான நிறுவனத்திலிருந்தும், விமான நிலைய நிர்வாகத்திலிருந்தும் அல்லது சம்பந்தப்பட்ட தரப்பிலிருந்தும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அதனால், தற்போது விஜய் மற்றும் திரிஷா இணைந்து பயணம் செய்ததாக பரவும் தகவலுக்கு நம்பகமான ஆதாரம் இல்லை என்பது தெளிவாகிறது.


இதன் அடிப்படையில், சமூக ஊடகங்களில் பரவும் “விஜய் – திரிஷா சமீபத்திய விமானப் பயணம்” என்ற தகவல் பழைய பயண ஆவணத்தை ஆண்டு மாற்றம் செய்து பரப்பப்பட்ட போலி தகவல் என Tamilagakural Fact Check Desk உறுதி செய்கிறது.


பிரபலங்கள் தொடர்பான இத்தகைய ஆவணப் படங்களை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்றி நம்பாமல், சமூக ஊடகங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


© தமிழககுரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad