தமிழ் மொழிக்கு 5,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கம்பன் விழாவில் வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் பெருமிதம் !
ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ் மொழிக்கு 5,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உண்டு,அத்தகைய பெருமை வாய்ந்த மொழிக்கு சொந்தக் காரர்கள் நாம் என்று பெருமைக்கொள்ள வேண்டும் என வாலாஜா கம்பன் விழா வில் வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் பெருமிதம் தெரிவித்தார்.ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை கம்பன் கழகம் சார்பில், 11 - வது ஆண்டு கம்பன் விழா ஐயப்பன் கோயில் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு வாலாஜாப்பேட்டை கம்பன் கழக தலைவர் பேராசியர் முனைவர் லோ. ராஜசேகரன் தலைமை வகித்து அனைவரையும் வரவேற்று பேசினார். திருப்பத்தூர் கம்பன் கழக மூத்த நிர்வாகி ரத்தின நடராஜன், பெங்களுரூரைச் சேர்ந்த மென்பொருள் நிறுவன முதன்மை செயல் அதிகாரி ராமேஷ் வெங்கடேசன் ஆகியோர் விழா வாழ்த்து ரை வழங்கினர். விழாவில் வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி. விசுவநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது “ தமிழ்நாட்டில் முதலாவ தாக உருவாக்கப்பட்ட நகரமன்றம் வாலாஜாப்பேட்டை. இந்த சிறப்பு மிக்க வாலாஜாப்பேட்டையில் கம்பன் கழகம் உருவாக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருவது மகிழ்ச்சி. நாங்கள் 2018-ம் ஆண்டு தனி தமிழ் இயக்கத்தை தொடங்கி நடத்தி வருகிறோம் ஆனால்,கி. பி. 12- ஆண்டு நூற்றாண்டிலேயே தனி தமிழ் இயக்கத்தை தொடங்கியவர் கம்பர் வடமொழியில் வால்மீகி இயற்றிய ராமாயணத்தை, தமிழ் பண்பாடு, இந்த மொழிக்கு ஏற்றாற் போல் பெருமை சேர்க்கும் வகையில் ராமாயணத்தை இயற்றியவர் கம்பர். இந்த மாற்றத்துக்கு என்ன காரணம் என்று சொன்னால் தமிழ் மொழி, பண்பாட்டை காப்பாற்ற வேண்டும் என்பது தான். தமிழ்மொழிக்கு என்று தனித்துவம் என்றும் உள்ளது. ஒரு காலத்தில் திராவிட மொழிகள் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. அதற்கு தலை மை தாங்கியது தமிழ் மொழி தான்.
சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆரியப்படையெடுப்புகள் நடந்தபோது, இது நான் சொல்ல வில்லை வரலாற்று பேராசிரியர்கள் சொல்கிறாா். இவர்கள் விவசாயத்தில் இருந்தார்களே தவிர, சண்டையிடபோட தெரியவில்லை ஆரியர் கள் சுலபமாக இவர்களை தோற்கடித்து அவர்களை தென்நாட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அதற்கு பிறகு வட மாநிலங் களில் வடமொழி பேசப்பட்டது. நமக்கு என்று இருந்த வலராற்றை கம்பர் அறிந்தார். தமிழ் மொழிக்கு 5,000 ஆண்டு களுக்கும் மேலான வரலாறுஉண்டு,சிந்து சமவெளி நாகரீகம் மற்றும் மொகஞ்சதா ரோ, ஹரப்பா நாகரீகம் நம்முடையதாகும். அவர்கள் எவ்வளவு பெரிய பண்பாட் டோடு வாழ்ந்தார்கள் என்று வரலாறு சொல்கிறது. கம்பர் தமிழக்கு என்று தனி இயக்கத்தை 12-வது நூற்றாண்டிலேயே தொடங்கி விட்டார். சடையப்ப வள்ளல் என்பவர் கம்பரை ஆதரித்தார். தன்னை ஆதரித்தவரை மறக்காமலும், தமிழுக்கும் பெருமை சேர்த்தவர் கம்பர். நான் பெரி யார் மீது பற்று உள்ளவன். ஆனால், தமிழ் மீது உள்ள பற்றால் கம்பராமாயணம் படித்தேன். உலகத்தில் பல ஆயிரம் மொழிகள் பேசப்பட்டாலும் 7 மொழிகளே மூத்த மொழிகளாக பேசப்பட்டது. மற்றவையெல்லாம் பேச்சிலும், எழுத்திலும் மாறிவிட்டது.மாறாத ஒரு மொழி தமிழ் மொழிதான்.இது உலகின் பழமையான, தொடர்ந்து பேசப்பட்டு வரும் மொழிகளில் ஒன்றாகும். அந்த மொழிக்கு சொந்தக்காரர்கள் நாம் என்று பெருமைக்கொள்ள வேண்டும். உலகத் தில் சுமார் 170-க்கும் மேற்பட்ட மொழி களில் திருக்குறள் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.திருக்குறள் எல்லோருடைய வீட்டில் இருக்க வேண்டும். அதனை படித்து, அதன் வழியில் நடந்தால் நன்மை இருக்கும். அந்த வகையில் தூய தமிழை காப்பாற்றும் வகையில் கம்பர் ராமாய ணத்தை இயற்றினார். தமிழ் இருக்கும் வரை கம்பரின் புகழ் இருக்கும் என்றார்.
முன்னதாக கம்பராமாயணம் மக்களின் மனதில் நிலைத்து நிற்பதற்கு பெரிதும் காரணம் இராமனின் சிறப்புகளா, சீதையின் சிறப்புகளா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.வாலாஜா கம்பன் கழகத் தலைவர் லோ.ராஜ சேகரன் நடுவராக தலைமையேற்று நடத்திய பட்டிமன்றத்தில் கோவை கம்பன் கழக செயலாளர் முனைவர் க.முருகேசன், இணை செயலாளர் வி.வீரபாலாஜி, கோவில்பட்டி கம்பன் கழக செயலாளர் த.சரவணன், செயற் குழு உறுப்பினர் சீ.தீபக் ஆகியோர் பேசினர்.தொடர்ந்து விழாயொட்டி நடத்தப்பட்ட ஓவியப் பேட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் மாலை 4 மணியளவில் மாணவர் மன்றம் , இசைமன்றம், சிந்தனை அரங்கம்,சிந்தனை உரை வழக்காடு மன்றம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடை பெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை வாலாஜாப்பேட்டை கம்பன் கழக செயலாளர் த.சங்கர் தயாள் பொருளாளர் மா.கந்தன்,துணைத் தலைவர் எ.கார்த்தி கேயன், இணைச் செயலாளர் பெ.பாபு, நிர்வாக குழு உறுப்பினர்கள்து நிர்மலா பி.சவுந்தர்யாஎ.தமிழரசு,டி.நித்தின் பிரபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக