வாணியம்பாடி அருகே மதுபோதையில் வெல்டிங் கடை தொழிலாளியை வெட்டி கொலை செய்த நண்பர்கள் 4 பேர் கைது!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த துருஞ்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). இவர் வெல்டிங் கடையில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 15ம் தேதி மாலை துருஞ்சிகுப்பம் கிராமத்தில் வீட்டில் இருந்த சுரேஷை அவரது நண்பர் கள் போன் செய்து அழைத்துள்ளனர். இவர்கள் வழக்கமாக ஓர் இடத்தில் அமர்ந்து மது அருந்துவது வழக்கம்.
நண்பர்களின் செல்போன் வந்ததை தொடர்ந்து அவர் மது அருந்துவதற்காக துருஞ்சிகுப்பம் கிராமத்தில் இருந்து
வெள்ளகுட்டை செல்லும் சாலையில் நண்பர்கள் அழைத்த இடத்திற்கு சென்று ள்ளார். அங்கே மது போதையில் இருந்த அவரது நண்பர்கள் சுரேஷ் உடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர், பின்னர் வாக்குவாதம் முற்றியதில் நண்பர்கள் 4 பேரும் சுரேஷை தாக்கியுள்ளனர்.
பின்னர் சுரேஷ் அங்கிருந்துதப்பியோடிய நிலையில், பின்தொடர்ந்து சென்ற நண்பர்கள் அவரை வழிமறித்து கத்தி யால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள னர்.
அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் உள்ள சுரேஷை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஆலங் காயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து ள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்ற ஆலங்காயம் போலீசார் சடலமாக கிடந்த சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக வாணியம்பாடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சியமளா தேவி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு போலிசார் விசாரணை நடத்தினர்.
சம்பவம் குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சரத் (வயது 24), தர்மதுரை (வயது32),
தென்பாண்டியன்(வயது 35), சுரேஷ் (வயது 39) ஆகிய நான்கு பேரை கைது போலீசார் விசாரணை மேற்கொண்டதில் குடி போதையில் ஏற்பட்ட தகராறில் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நான்கு பேர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். குடிபோதையில் நண்பர்கள் ஒன்று சேர்ந்து, மற்றொரு நண்பனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக