குடியாத்தத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 18 டிசம்பர், 2025

குடியாத்தத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் !

குடியாத்தத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் !
குடியாத்தம் , டிச 18 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில். கோட்ட  அளவிலான விவசாயிகள் . குறை தீர்வு நாள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமை தாங்கினார்
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை துறை உதவி இயக்குனர் உமாசங்கர்முன்னிலை வகித்தார். நேர்முக உதவியாளர் ரமேஷ் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். சேம்பள்ளி. ஊராட்சி கொட்டாரமடுகு. பகுதியில் வனத்துறை க்கு சொந்தமான 50 மீட்டர்  தொலை விற்கு. ஜல்லி கற்கள் மணல் பரப்பி சமன் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் விவசாய நிலத்துக்கு செல்லும் விவசாயி கள் அவதி அடைந்து வருகின்றனர் வனத்துறையின் அனுமதி வழங்கி . தார் .ஊற்றி. சாலை அமைக்க வேண்டும். 
வனத்துறை ஒட்டிய பகுதிகளில் சிலர் விறகுகளை வெட்டி கடத்திச் செல்கின்ற னர் இதனால் மரங்கள் அழியும் நிலை ஏற்பட்டு வருகிறது. அதை வனத்துறையி னர் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அனுப்பு பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்களை காட்டு பன்றிகள் மிதித்து நாசம் செய்துள்ளது அதை கணக்கீடு செய்து உரிய நிவார ணம் வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார் கள் இந்நிகழ்ச்சியில் . பல்வேறு துறை அதிகாரிகள் குடியாத்தம் பேர்ணாம்பட்டு கே வி குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad