கேவி குப்பம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அதிமுக சார்பில் கல்லப்பாடி குருசாமி - மனு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 18 டிசம்பர், 2025

கேவி குப்பம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அதிமுக சார்பில் கல்லப்பாடி குருசாமி - மனு !

கேவி குப்பம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அதிமுக சார்பில் கல்லப்பாடி  குருசாமி - மனு !
குடியாத்தம் ,டிசம்பர் 18 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி ,கட்டிட ஒப்பந்தாரம் மற்றும் மேஸ்திரி பணி செய்து வருகிறார் 
வேலூர் புறநகர் மாவட்டம் அதிமுக தொழிற்சங்க மாவட்ட இணை செயலா ளர், மற்றும் சிவராஜ்புரம் கிளை செயலாளர் பதவி வகித்து வருகிறார்.
கல்லப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.கல்லபாடி ஊராட்சி வார்டு உறுப்பினர் , அரசு மேல்நிலைப் பள்ளி பி டி ஏ துணைத் தலைவர் ஆகிய பதவியை வகித்தவர். பல்வேறு மாவட்டங்களில் அதிமுக சார்பில் தேர்தல் பணியில் ஈடுப்பட்டவர்.நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில் கேவி குப்பம் சட்டமன்ற தனி தொகுதியில் போட்டியிட பலமுறை அதிமுகவில் விருப்பமான அளித்தவர்.அதன்படி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் கேவிகுப்பம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட  சென்னையில் ராயப்பேட்டை பகுதியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமான அளித்தார். அப்பொழுது உறுதிமொழி ஆணையர் வழக்கறிஞர் செண்டத்தூர் கனிமொழி , லிங்குன்றம் பிரசாந்த்  ஆகியோர் உடன் இருந்தனர் அப்போது ஒரு மாநில தொழிற்சங்க செயலாளர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad