தொழிலாளர்களுக்கு விரோதமாக 4 சட்டத் தொகுப்புகளாக வெளியிட்டுள்ள மோடி அரசை கண்டித்து இடதுசாரி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 10 டிசம்பர், 2025

தொழிலாளர்களுக்கு விரோதமாக 4 சட்டத் தொகுப்புகளாக வெளியிட்டுள்ள மோடி அரசை கண்டித்து இடதுசாரி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

தொழிலாளர்களுக்கு விரோதமாக 4 சட்டத் தொகுப்புகளாக வெளியிட்டுள்ள மோடி அரசை கண்டித்து  இடதுசாரி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
திருப்பத்தூர் , டிச 10 -

                               திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கள் கட்சி,உள்ளிட்ட கட்சியினர் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள 44 தொழிலாளர் நலச்சட்டங்களை கார்பெட் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், தொழி லாளர்களுக்கு விரோதமாக 4 சட்டத் தொகுப்புகளாக வெளியிட்டுள்ள மத்திய மோடி அரசை கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியன் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன உரையாற்றி னர் பின்னர் செய்தியாளரிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பேசுகையில்
மத்திய அமைச்சர் அமிர்ஷா அவர்கள் நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணியை துடைத்தெறிவோம்  என பேசியுள்ளார் தமிழ்நாட்டு மக்கள் பிஜேபி அங்கம் இருக்கும் கட்சியை துடைத்தெறிவார்கள் என பேசினார் எங்கள் கட்சி கூட்டணி வலுவாக இருக்கிறது எனவும் பேசினார்.
உடன் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது 
கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad