திருவண்ணாமலையில் மலையின் மீது ஏறி தீப தரிசனம் காண சென்ற பக்தர் மரணம் !
திருவண்ணாமலை , டிச 10 -
திருவண்ணாமலை மாவட்டம் தீபத் திருவிழாவையொட்டி கடந்த 3ம் தேதி முதல் 13ம் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் மகா தீபம் 2668 அடி உயர மலை மீது காட்சி அளிக்கும். அதற்காக கோ வில் நிர்வாகம் சார்பில் 2000 மேற் பட்ட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப் பட்டு வந்தது. ஆனால் சென்ற ஆண்டு மலை யின் மீது ஏற்பட்ட மண் சரிவு காரணமாக பக்தர்கள் மலை ஏற தடை செய்யப்பட்டது
அதேபோல் இந்த ஆண்டு வல்லுநர்களை வர வைத்து மலையின் உறுதி தன்மை யை ஆராய்ந்து அதிக அளவு மழையில் மண்சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளது என்பதால் கோயில் நிர்வாகம் சார்பில் இந்தாண்டும் மலை மீது ஏற பக்தர்களு க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தடையை மீறி நேற்று மாலை மலை மீது ஏறிச் சென்ற பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் (வயது 40) என்பவர் தீப தரிசனம் காண சென்ற போது சுமார் 500 அடி உயரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் தடையை மீறி மலை ஏறும் பக்தர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை செய்தியாளர்
-கலையரசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக