வேலூரில் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பி னர் டிசம்பர்-13ல் உரிமை மீட்பு உண்ணா விரத போராட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 10 டிசம்பர், 2025

வேலூரில் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பி னர் டிசம்பர்-13ல் உரிமை மீட்பு உண்ணா விரத போராட்டம் !

வேலூரில் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பி னர் டிசம்பர்-13ல் உரிமை மீட்பு உண்ணா விரத போராட்டம் !
வேலூர் , டிச 10 -

வேலூர் மாவட்டம் தமிழ்நாடு முதலமைச் சர் அவர்களின் 2021 தேர்தல் கால வாக் குறுதியின்படி இலட்சக்கணக்கான ஆசிரியர் அரசு ஊழியர் அரசுப்பணி யாளர் வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் அனைவருக் கும் நடைமுறைபடுத்த கோருதல், உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி 13.12.2025ல் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என மாவட்ட நிர்வாககுழு கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது. வேலூர் மாவட்ட உயர்மட்டக்குழு வின்  மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ட்டி.டி.ஜோஷி, எம்.ஜெயகாந்தன், ஆ.ஜோசப்அன்னையா, ஜி.சீனிவாசன், ஆகியோர் தலைமையில் மாவட்ட நிர் வாகக்குழு கூட்டம் வேலூரில் நடை பெற்றது.மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் செ.நா.ஜனார்த்தனன், முகமதுஷாநவாஸ்  தனசேகர் அ.சேகர் ஆகியோர் கோரிக்களை விளக்கி பேசினர்.இக் கூட்டத்தில் தமிழக ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் நலச்சங்கத்தின் மாநில தேர்தலில்  மாநில செயல் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்ட வேலூர் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் எம்.ஜெயகாந்தனுக்கு சால்வை அணிவித்து பாராட்டப்படடார்.பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாகநிறைவேற்றப் பட்டது தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களின் 2021 தேர்தல் கால வாக்குறுதி யின்படி இலட்சக்கணக்கான ஆசிரியர் அரசு ஊழியர் அரசுப்பணியாளர் வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் அனைவருக்கும் நடைமுறைபடுத்த கோருதல், உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி 13.12.2025ல் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடத்து வது மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை ஆசிரியர் அரசு ஊழியர்கள் திரளாக பங்கேற்க செய்வதற்காக 11 மற்றும் 12 ஆகிய இரண்டு நாட்கள் பிரச்சார இயக்கம் நடத்துவதற்கு ஆலோசனை செய்து உள்ளனர். 

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad