வேலூர் ஒன்றியம் மற்றும் டி கே எம் மகளிர் கல்லூரி கிளைகளின் ஒருங்கி ணைந்த அறிவியல் இயக்க மாநாடு!
வேலூர் ,டிச 10 -
சிறப்பான அறிவியல் செயல்பாடுகளை செய்த ஆசிரியர்கள், தன்னார்வ தொண் டர்கள் மாணவர்களுக்கு கேடையம் வழங்கி பாராட்டு !
வேலூர் மாவட்டம் அறிவியலை அறி வோம் அறிவியலால் இணைவோம் என்ற மையக்கருத்தை முன்வைத்து,தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் ஒன்றியம் மற்றும் டி.கே.எம்.மகளிர் கல்லூரி அளவிலான அறிவியல் இயக்க மாநாடு இன்று கல்லூரியின் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இம் மாநாட்டில் சிறப்பான அறிவியல் செயல்பாடுகளை செய்த ஆசிரியர்கள், தன்னார்வ தொண்ட ர்கள் மாணவர்களுக்கு கேடையம் வழங்கி பாராட்டப்பட்டனர். இன்றைய தலைமுறை 100 விஞ்ஞானிகள் என்ற அறிவியல் புத்தகத்தை வெயிட்டனர் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்கப் பட்டனர்.கல்லூரியின் முதல்வர் மற்றும் கல்லூரி அறிவியல் இயக்க கிளை தலைவர் முனைவர் ஆர்.பானுமதி, ஒன்றிய கிளை தலைவர் முனைவர் க.தேவி ஆகியோர் தலைமை தாங்கி னார்கள். அறிவியல் நிருவாகிகள் மற்றும் அறிவியல் இயக்க முன்னோடி கு.செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் அறிவியல் பரப்பியே அறியாமையை அகற்றுவோம் என்ற முழக்கத்துடன் அறிவொளி தீபத்தை ஏற்றி வைத்தனர். கல்லூரி கிளை துணைத்தலைவர் பேராசிரியர் டி.சசிகலா வரவேற்று பேசினார். அறிவியல் இயக்க வேலூர் ஒன்றியக் கிளை செயலாளர் முத்து சிலுப்பன் அறிவியல் இயக்க செயல் பாடுகள் மற்றும் வேலை அறிக்கை சமர்பித்து, மாநாட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். கிளை பொருளாளர் ப.சேகர் வரவு செலவு அறிக்கை சமர்பித்து பேசினார்.
வேலூர் மாவட்ட செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் இரண்டு மாநாடு களையும் தொடக்கி வைத்து பேசினார். கல்லூரி கிளையின் அறிவியல் இயக்க செயலாளர் முனைவர் வி.ரோகா இணை செயலாளர்கள் முனைவர் வி.பிரபா, முனைவர் எ.வித்யா, பொருளாளர் முனைவர் உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். புரிந்துண ர்வு ஒப்பந்தம் அறிவியல் இயக்கம் டி.கே.எம்.கல்லூரியுடன் இணைந்து வருங்கால அறிவியல் இயக்க செயல் பாடுகளை விரிவாக்கம் செய்ய புரிந் துணர்வு ஒப்பந்த ஆவணத்தினை கல்லூரியின் முதல்வர் ஆர்.பானுமதி, அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், ஆகியோர் பரிமாற்றம் செய்துக்கொண்டனர்.
சிறப்பு நிகழ்வாக எழுத்தாளர் கல்வி யாளர் ஆயிசா நடராஜன் எழுதிய இன்றைய தலைமுறை 100 விஞ்ஞானி கள் என்ற அறிவியல் புத்தகத்தை கு.செந்தமிழ்ச்செல்வன் வெளியிட, பேராசிரியர் சசிகலாபெற்றுக்கொண்டார்
என்.கிருஷ்ணசாமி முதலியார் அரசு நிதிஉதவி மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியை பி.கவிதா, வேலூர் மாநகராட்சி அரசு முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியை எம்.சினேக லதா, ஆகியோர் வாழ்த்தி பேசினர்
ஒன்றிய கிளை நிர்வாகிகள் ச.இளவழ கன், அ.சந்துரு, அ.பீமாராவ், அ.பூசாமி, ஆகியோர் தீர்மானங்களை முன்மொழி ந்து பேசினர்கருத்தாளர்கள் டி.சுகுமாரன், விக்கிபீடியா எழுதரதாளர் கி.மூர்த்தி, பா.ராஜேந்திரன், ஆசிரியர்கள் டி.பிரகாஷ், என்.கோட்டீஸ்வரி, சானஹாஸ் பாதீமா, டி.புகழேந்தி என்.கலைச்செல்வன், ஜெயந்தி, எம்.மதனகாமராஜன், செல்வகுமாரி, உதயநந்தினி, பி.உமாமகேஸ்வரி ஆகியோரின் சிறப்பான அறிவியல் செயல்பாடுகளை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். வினாடி வினா, துளிர் திறனறி தேர்வு மற்றும் அறிவியல் ஆய்வில் ஈடுபட்ட பள்ளி மாணவர் இளம் விஞ்ஞானிகளு க்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளராக அறிவியல் மற்றும் அறிவொளி இயக்க முன்னோடி, மக்கள் நல சந்தை, அறிவுத்தோட்டம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் அறிவியல் இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினர் கு.செந்தமிழ்செல்வன் பங்கேற்று நிறைவுரையாற்றினார். கல்லூரி மாணவியர் ஒருங்கிணைப்புகுழுவினர் டி.அர்ச்சனாதேவி, பி.பிரியதர்ஷிணி, கே.அத்தியாபரடோஸ் ஆகியோர் மாநாட்டு பணிகளை ஒருங்கிணைத் தனர்.நிறைவாக அடுத்துவரும் இரண்டு ஆண்டுகளுக்கான வேலூர் ஒன்றியக் குழு நிருவாகிகளாக பின்வரும் நிர்வாகி கள் ஒரு மனதாக தேர்தெடுக்கப்பட்டனர்.
ஒன்றிய கிளை தலைவராக முனைவர் க.தேவி துணைத்தலைவர்களாக முத்து.சிலுப்பன், பேராசிரியர் கிருத்திகா, அ.சந்துரு, ஆசிரியர் எம்.சினேகலதா
கிளை செயலாளராக பா.ராஜேந்திரன்,
கிளை இணை செயலாளர்களாக ஆசிரியை ஜெயந்தி, சானஹாஸ் பாதீமா, ச.இளவழகன், ப.சேகர் கிளை பொரு ளாளராக எம்.பீமாராவ், அறிவியல் செயல்பாடுகளுக்கான ஒருங்கிணைப் பாளர்களாக எழுத்தாளர் கி.மூர்த்தி, ஆசிரியர்கள் என்.கோட்டீஸ்வரி, டி.பிரகாஷ், என்.கலைச்செல்வன், எம்.மதனகாமராஜன். டி.புகழேந்தி, டி.சுகுமார் பி.கோகிலா, ரூபன் ஆகியோர் ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டனர்.
டி.கே.எம். கல்லூரி நிருவாகிகளாக கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.பானு மதி, துணைத்தலைவராக பேராசிரியர் டி.சசிகலா, செயலாளராக முனைவர் ரேகா,இணை செயலாளர்களாக முனைவர் வி.பிரபா, முனைவர் ஏ.வித்யா, பொருளாளராக முனைவர் எல்.உமாம கேஷ்வரி, மாணவர் ஒருங்கிணைப்பாளர் களாக மாணவிகள் டி.அர்ச்சனாதேவி, பி.பிரியதர்ஷனி, கே.அத்தியா பரிடோஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதியாக புதியதாக தேர்வு செய்யப்பட்ட ஒன்றிய செயலாளர் பா.ராஜேந்திரன் நன்றிவுரை கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக