டிச. 15-
முத்தையாபுரம் பல்க் பஜாரில் முன்னாள் முதல்வர் காமராஜரை அவதூறாக பேசிய யூடியூபர் முக்தரைரை கண்டித்து சமுதாய அமைப்புகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திமரப்பட்டி கோவங்காடு, குலையங்கரிசல், எம் தங்கம்மாள்புரம், ராஜீவ் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நாடார் அமைப்புகளை சார்ந்தவர்கள்
அதிமுக சார்பில் சித. செல்ல பாண்டியன், பாஜக சார்பில் உமரி சத்தியசீலன், மாதவன், சின்ன தங்கம், காங்கிரஸ் சார்பில் சாமுவேல் ஞானதுரை, பிரபாகரன், புரட்சி பாரதம் கட்சி சார்பில் மாரி செல்வம், தவெக சார்பில் அஜிதா ஆக்னஸ், விவசாய சங்கம் சார்பில் பூபதி, வியாபாரிகள் சங்கம் சார்பில் தனகரன்,
உப்பு உற்பத்தியாளர் சங்கம் சிவாகர், முத்தையாபுரம் புலவர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது யூடியூபர் முக்தரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக