இளைஞர்கள் போதை போன்ற தவறான பாதையை விட்டு சரியான பாதையை வழிகாட்டும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலின் முன்னெடுப்பான வெற்றிப்பாதை என்னும் தலைப்பில் மாவட்ட காவல்துறை சார்பில் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கப்பட்டது.
வெற்றிப்பாதை பயிற்சி மையத்தில் படித்து தற்போது தமிழ்நாடு சீருடை தேர்வாணையம் நடத்திய சார்பு ஆய்வாளர் தேர்வு எழுதிய மற்றும் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்ற இளைஞர்களுக்கு இலவச உடல் தகுதி பயிற்சியை (Physical Training)நேற்று 29-12-25 மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலின் மாவட்ட ஆயுதப்படையில் வைத்து துவக்கி வைத்தார்.
இந்தப் பயிற்சிகள் தினமும் காலை 06 மணி முதல் 07.30 மணிவரை மாலை 4 மணி முதல் 06.30 மணி வரையிலும் மாவட்ட ஆயுதப்படையில் வைத்து நடைபெறும்.
இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த இளைஞர்கள் 9498103903 என்ற whatsapp இல் தங்களது பெயர் மற்றும் தேர்வு மதிப்பெண்கள் அனுப்பி பதிவு செய்து இந்த பயிற்சியில் கலந்து கொள்ள முடியும்.
இளைஞர்களுக்கு சரியான பாதையை வழிகாட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் இந்த முன்னெடுப்பை அனைத்து இளைஞர்களும் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுகொண்டனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக