ஸ்பிக்நகர், டிச. 17- தூத்துக்குடி தாளமுத்து நகர் வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் ஹரி(21). கட்டிட தொழிலாளி. நேற்று முள்ளக்காடு அருகேயுள்ள சந்தோஷ் நகரில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு முள்ளக்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக