குடியாத்தத்தில் முதியவர் கால் வாயில் தவறி விழுந்து உயிரிழந்தார். போலீசார் விசாரணை !
டிசம்பர் 29
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் 15 சீவூர் மதுரா லக்ஷ்மணாபுரம் கிராமத்தில் செல்லும் பாக்கம் ஏரிக்கால்வாயின் கல்வெட்டின் மீது இன்று காலை 11.30 மணியளவில் மேற்படி லஷ்மணாபுரம் கிராமத்தைச் சார்ந்த திரு.நடராஜன் த/பெ பெரியசாமி (வயது70) என்பவர் மது அருந்திய பின் மேற்படி கிராம சர்வே எண் 50 பாக்கம் ஏரி கால்வாய் கல் வெட்டின் மீது அமர்ந்து கொண்டு
இருந்தார் பின்னர் கல்வெட்டில் இருந்து தவறி விழுந்து கால்வாயில் இறந்துள் ளார் என்பது அருகில் உள்ள பொது மக்களை விசாரணை செய்ததில் தெரிய வருகிறது. மேற்படி இறந்த நடராஜன் என்பவருக்கு இந்திராணி என்ற மனைவியும் பிரபாகரன், ராஜா என்ற ஆண் பிள்ளைகள் வளர்மதி, சுமதி என்ற பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர் மேஸ்திரி கூலி வேலை செய்து வந்தார்
இது தொடர்பாக நகர காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பிரேதம் உடற் கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக