வாணியம்பாடி அருகே குடிபோதையில் தகராறு. 2 வாலிபர்களுக்கு சரமாரி கத்தி வெட்டு. தப்பி ஓடியே குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்!
வாணியம்பாடி,டிச.29 -
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச்சாவடி பகுதி அருகில் சதீஷ் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வாணியம்பாடி பகுதியை சேர்ந்த ஜெகன் பிரசாத், பாஸ்கர், மணிகண்டன், சிரஞ்சீவி ஆகி யோர் உணவகத்திற்கு சென்றனர். அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது பாஸ்கர் மற்றும் குகன் ஆகியோருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திர மடைந்த பாஸ்கர் மற்றும் குகன் காரில் மறைத்து வைத்திருந்த கத்திய எடுத்து வந்தனர். தொடர்ந்து, வாக்கு வாதம் முற்றியதில் பாஸ்கர் மற்றும் குகன் சேர்ந்து மணிகண்டனை பின்பக்க தலையில் சரமாரியாக வெட்டினர். அப்போது தடுக்க சென்ற ஜெகன் பிரசாத் தையும் கத்தியால் வெட்டிவிட்டு 2 பேரும் தப்பி ஓடினர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் வலி தாங்க முடியாமல் அலறினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அம்பலூர் போலீசார் அங்கிருந்தவர்கள்உதவியுடன் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மணிகண்டனை மேல்சிகிச்சைக்காக. வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து போலீ சார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பாஸ்கர் மீது ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் பதிவாகி இருப்பதும், அவர் தேடப்பட்டு வரும் குற்றவாளி என்ப தும், இது தொடர்பாக பேசிக் கொண்டி ருந்த போது வாக்குவாதம் ஏற்பட்டதும், அதில் மணிகண்டன், ஜெகன் பிரசாத்தை வெட்டியதும் தெரியவந்தது.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 வாலிபர்களை வெட்டி விட்டு தப்பியோடிய பாஸ்கர் மற்றும் குகனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
செய்தியாளர்.
மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக