நாட்றம்பள்ளி அருகே பாலாற்று நீரில் மூழ்கி இரண்டு பெண்கள் உயிரிழப்பு. போலீசார் விசாரணை!
வாணியம்பாடி, டிச.29-
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோகிலா (வயது18). இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது அக்கா மதுபிரியா (வயது 22), புதுப்பேட்டை கிழக்கு மேடு பகுதியைச் சேர்ந்த ஜெய காந்தன் மனைவி சுபஸ்ரீ (வயது 22), இவரது தம்பி தம்பிதுரை (வயது 20) மற்றும் ஜெயகாந்தன் நண்பன் பிரவீன் ஆகிய 6 பேர் நாட்றம்பள்ளி தகரகுப்பம் அருகே பாலாற்றில் குளித்துக் கொண்டி ருந் தபோது எதிர்பாராத விதமாக ஆழ மான பகுதிக்கு சென்ற கோகிலா மற்றும் சுபஸ்ரீ ஆகிய இருவர் நீரில் மூழ்கி மாய மாகினர்.இதனை பார்த்த மது பிரியா கத்தி கூச்சலேட்டனர் உடன் இருந்தவர் கள் மாயமான கோகிலா, சுபஸ்ரீ ஆகி யோரை நீண்ட நேரம் போராடி மீட்டு இருசக்கர வாகனத்தில் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்து வர்கள் கோகிலா மற்றும் சுபஸ்ரீ இரு வரும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி னர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திம்மாம்பேட்டை காவல் துறையினர் இருவர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். ஒரே பகுதியை சேர்ந்த 6 பேர் பாலாற்றில் குளிக்க சென்ற போது இரண்டு பெண் கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்.
மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக