திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை குப்பை மேலாண்மையை கடைப்பிடிக்காமல் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரிக்காமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போட்ட மாநகராட்சி தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ஒரு டன்னுக்கு ஒரு தொகையை நிர்ணயம் செய்து லட்சக்கணக்கில் கொடுத்து கொண்டிருக்கிறார்கள் தற்போது சில மாதங்களாக குப்பைகளை கொட்ட செல்லும் வாகனங்களை அந்தந்த கிராம பொதுமக்கள் குப்பைகளை கொட்ட அனுமதிக்காமல் போராட்டங்களை செய்து வருகின்றனர் இதில் ஒரு பகுதியாக திருப்பூர் இடுவாய் கிராமத்தில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காவல்துறையினரின் காலில் விழுந்து கெஞ்சிய காட்சி நெஞ்சை உருக்கும் விதமாக இருந்தது விவசாயத்தை அழிக்காதீர்கள் பொதுமக்களை வாழ விடுங்கள் என்று காவல்துறையினரை மாநகராட்சி அதிகாரிகளை கையெடுத்து கும்பிட்டு கெஞ்சுகின்றனர் இடுவாய் கிராம மக்கள் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் குப்பைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக