புத்தாண்டு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் மாவட்ட கண்காணிப்பாளர் உதரவு !
ராணிப்பேட்டை, டிச 31 -
ராணிப்பேட்டை மாவட்டம் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு காவல்துறையின் அறிவிப்பு வருகின்ற புத்தாண்டை முன்னிட்டு இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், உத்தரவின் பேரில் 31.12.2025 மாலை முதல் 01.01.2026 வரை இராணிப் பேட்டை மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வழி பாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள்
உட்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனி கவனம் செலுத்தி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டம் முழவதும் குற்றங்களை தடுக்க நெடுஞ்சாலை ரோந்து வாகனங் கள் 5, நான்கு சக்கர ரோந்து வாகனங்கள 10,இரண்டு சக்கர ரோந்து வாகனங்கள் -55, மூலமாக கண்காணிக்கப்படும், புத்தாண்டு அன்று குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்கள், 2-க்கும்
மேற்பட்ட நபர்கள் இரு சக்கர வாகனங் களில் செல்பவர்கள் மற்றும் அதிவேக மாக வாகனம் ஓட்டுபவர்கள் ஆகியவற்றி னை தடுக்க மாவட்டம் முழுவதும் 37 இடங் களில் வாகன தணிக்கையில்ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். போக்குவரத்துகளை சீர்
செய்ய போக்குவரத்து காவல் குழுவும், குற்ற நடவடிக்கைகளை தடுக்க சாதாரண உடையில் காவல் குற்றப்பிரிவு தனிப் படையும், பாதுகாப்பு மற்றும் சட்ட விரோத செயல்கள் நடைபெறா வண்ணம் டிரோன்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இப்பாதுகாப்பு பணியில் 1 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 2 துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் என மொத்தமாக 641நபர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர் .புத்தாண்டு இரவில் இரு சக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து "பைக் ரேஸ் செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்பவர் களின், பைக்குகளை பறிமுதல் செய்யப் படும். அதே போன்று சாலையில் செல் லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் "வீலிங்" செய்வது, அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் செல்வதும், பொது இடங்களில் நின்று மது அருந்திவிட்டு பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.பொதுமக்கள் அனைவரும் இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை க்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து மற்றவர் களுக்கு இடைபூறு இல்லாத வகையில் மகிழ்ச்சியான முறையில்புத்தாண்டினை கொண்டாட மாவட்ட காவல்துறை சார் பாக அறிவுறுத்தப்படுகிறது
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே சுரேஷ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக