டிச.30- தூத்துக்குடி மாவட்டம், பழையகாயல் சிர்கோனியம் குடியிருப்பைச் சேர்ந்தவர் செந்தூரபாண்டி மகன் மாரிசெல்வன் (25), இவர் கங்கை கொண்டானில் உள்ள சோலார் நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இரவு வேலை முடிந்த பின்னர் பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே வந்தபோது பின்னால் வந்த ஒரு லாரி பைக் மீது மோதியது.
இவ்விபத்தில் காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக