திருப்பத்தூரில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சங்கம் சார்பில் நகல் எரிப்பு போராட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 10 டிசம்பர், 2025

திருப்பத்தூரில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சங்கம் சார்பில் நகல் எரிப்பு போராட்டம் !

திருப்பத்தூரில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சங்கம்  சார்பில் நகல் எரிப்பு போராட்டம் !
திருப்பத்தூர் , டிச‌ 10 -

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஐக்கிய விவசாயி கள் முன்னணி உள்ளிட்ட விவசாயி சங்கங்கள் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் விரோத ஒப்பந்தத்தையும் விதை சட்டத்தையும் ரத்து செய்யக்கோரி
நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. 
இதில் ஒன்றிய பிஜேபி அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகள் விரோத இதே சட்டமான (ITPGRFA) சட்டத்தை திரும்ப பெற வேண்டும், மின்சார திருத்த சட்டமான 2025, விவசாயத்தை அந்நிய வணிக நிறுவனங்கள் தாரைவார்க்கும் (GB11) ஒப்பந்தம், நமது நாட்டின் உணவு தற்சார்பு கொள்கையை சீர்குலைக்கும் இந்திய அமெரிக்க விவசாயத் துறை வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட விவசாயி களின் விரோத ஒப்பந்தத்தை திரும்ப பெற கோரி மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி விவசாயி சங்கத்தினர்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் விவசாய சங்கத்தினர் நகல் களை எரித்தனர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
உடன் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது   விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட,நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad