திருப்பத்தூர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா!
திருப்பத்தூர் , டிச 10 -
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி திருப்பத்தூர் ஒன்றியத்துக்குட் பட்ட மாடப்பள்ளி ஊராட்சியில் பிற்படுத் தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்படோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மடவாளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டி யினை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பி னர் A_நல்லதம்பி,MLA, அவர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார். திருப் பத்தூர் ஒன்றிய குழு தலைவர் விஜயா அருணாசாலம் அவர்கள் தலைமையில்.
மடவாளம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் மற்றும் மாணவர்கள் சிறப்பான வர வேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சிகளில் திருப்பத்தூர் ஒன்றிய குழு துணை தலைவர் T.R.ஞானசேகரன், கழக நிர்வாகிகள் M.G.ராமச்சந்திரன், L.சிவலிங்கம், சரவணன், கஸ்தூரிரகு, கோமதிகார்த்திகேயன், விஜயகுமார், செல்வம், காமராஜ், L.சிவக்குமார், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், பள்ளி மேலாண் மை குழு நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக