தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் சாலை மறியல் !
ராணிப்பேட்டை , நவ 10 -
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவி யாளர்கள் சங்கம்சார்பில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக
அரசுக்கு எதிராக சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தின் போது, தமிழக முதல்வர் தேர்தல் கால வாக்குறுதியாக அளித்த அங்கன்வாடி ஊழியர்கள்மற்றும் உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் எனவும், 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் மற்றும் காலி பணியிடங்களை விரைந்து நிரப்புதல்.
மேலும், அகவிலை படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு அம்ச
கோரிக்கைகளை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டனம்முழக்கங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத் தினர் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர். இச்சம் பவம் அப்பகுதியில் பரபரப்பை
ஏற்படுத்தியது
மாவட்ட சிறப்பு செய்தியாளர்
ஆர்ஜே.சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக