திமுக பூத் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் என் வாக்கு சாவடி ஒருங்கி ணைந்த கூட்டம் சேர்மன் தலைமையில்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 11 டிசம்பர், 2025

திமுக பூத் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் என் வாக்கு சாவடி ஒருங்கி ணைந்த கூட்டம் சேர்மன் தலைமையில்!

திமுக கிளை இளைஞரணி நிர்வாகிகள் பூத் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்கு சாவடி
அரக்கோணம், டிச. 11-

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நேற்று மாலை தனியார் திருமண மண்டபத்தில் கிளை இளைஞரணி நிர்வாகிகள், பூத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்‌ சாவடி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஒருங்கி ணைத்து கூட்டம் நடந்தது. இந்த கூட்டத் துக்கு யூனியன் சேர்மன் வடிவேல் தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பவானி முன்னிலை வகித்தார். தலைமை செயற் குழு உறுப்பினர் கண்னையன் வரவேற் றார்.சிறப்பு விருந்தினராக ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் கலந்துகொண்டு
பேசியதாவது, புதியதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள பூத் நிர்வாகிகள் மற்றும் கிளை செயலாளர்கள் வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இன்று முதல் கடுமையாக உழைக்க வேண்டும். தமிழக முதல்வரின் உன்னத திட்டங்களான மகளிர் உரிமை தொகை, இல்லம் தேடி கல்வி, நலம் காக்கும் ஸ்டாலின் முகாம், காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து கிராமங்கள் தோறும் பொது மக்களுக்கு எடுத்து கூற வேண்டும். மேலும் தமிழக முதல்வரின் ஆலோச னைப்படி என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி என்னும் பெயரில் தங்கள் பகுதியில் கூட்டங்களை நடத்த வேண்டும். எஸ்ஐஆரில் விடுப்பட்ட பெயர் களை சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று அவர் பேசினார்.
இதில் யூனியன் கவுன்சிலர் விநாயகம், நிர்வாகிகள் அப்துல்ரகுமான், புருஷோத் தமன், பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad