டிசம்பர் 10, தூத்துக்குடி மாவட்டம் சில்வர்புரம் அருகே இன்று காலை மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் திருமணம் நடைபெற்றது. அதை தொடர்ந்து மணமக்கள் கேக் வெட்டினர். ஒவ்வொரு ஜோடிக்கும் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்கத்தாலி, திருமண உடைகள், மிக்ஸி, கிரைண்டர், தொலைக்காட்சி பெட்டி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கட்டில், மெத்தை, தலையணை, பீரோ, சேர். குக்கர், மின் விசிறி, சூட்கேஸ், ஸ்டூல், சமுக்காளம், வீட்டு உபயோகப்பொருட்கள், ஒரு மாதத்திற்கு தேவையான பலசரக்கு மற்றும் அரிசி போன்ற சீதனப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் அருட்பணியாளர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், நன்கொடையாளர்கள், மருத்துவர்கள், சங்க நிர்வாக உறுப்பினர்கள், தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவர்கள் நல் உள்ளம் கொண்ட பிறரன்பு உடையோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு நல்லாசி வழங்கினார்கள். ஏற்பாடுகளை லூசியா இல்ல இயக்குனர் ஜான் பென்சன், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக