நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கிளைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர் வடிவேலு பங்கேற்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 24 டிசம்பர், 2025

நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கிளைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர் வடிவேலு பங்கேற்பு !

நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கிளைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர் வடிவேலு பங்கேற்பு !
ராணிப்பேட்டை , டிச 24 -

ராணிப்பேட்டை  மாவட்டம், நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கிளைக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம், நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவேலு அவர்கள் தலை மையில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப் பாளர் பவானி வடிவேலு, ஒன்றிய நிர் வாகிகள், அவைத்தலைவர் புருஷோத் தமன், துணை செயலாளர்கள் பாண்டி யன், முகமது அப்துல் ரகுமான், பாரதி ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் வடிவேல் அவர்கள் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலை திட்டத்திற்கு ஹிந்தியில் பெயர் வைத்து, திட்டத்தையே ஒழிக்கும் நோக்கத்துடன் சட்டத்தை கொண்டு வந்துள்ள ஒன்றிய பாஜக அரசையும், அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவின் அடிமைத்தனத்தையும் கண்டித்து நாளைய தினம் ஒருங்கிணைந்த நெமிலி ஒன்றியம் சார்பில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், நெமிலி கிழக்கு ஒன்றியம், மத்திய ஒன்றியம், வடக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியம் என நான்கு ஒன்றிய கழகங்களில் சார்பிலும் கழக நிர்வாகிகளும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பயன்பெறக்கூடிய பணியாளர்களையும், பொதுமக்களையும் ஒன்று திரட்டி இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டத்தின்படி, இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. எனவே அதுசமயம் ஒருங்கிணைந்த ஒன்றியத்தைச் சார்ந்த அனைத்து கழக நிர்வாகிகளும் உடன்பிறப்புகளும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். என ஒன்றிய கழக செயலாளர் *வடிவேலு* அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.
தற்போது தேர்தல் ஆணையத்தால் வரைவு வாக்காளர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலை அனைத்து கிளைக் கழக செயலாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் டிஜிட்டல் ஏஜெண்ட் மற்றும் கிளை நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல் பட்டு அந்த பட்டியலில் தகுதியான வாக்காளர்கள் அனைவரும் இடம் பெற்றுள்ளனரா?என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும், யாரேனும் பெயர் விடுபட்டிருந்தால் அவர்கள் பெயரை உரிய வடிவத்தில் பூர்த்தி செய்து வாக்குச்சாவடி அலுவலரிடம் வழங்கி அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க உரிய ஏற்பாடுகளை செய்யப்பட வேண்டும், என்று நிர்வாகிகளை கேட்டுக் கொண்டார். மேலும் கழக ஆக்க பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார். இக்கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், வாக்குச் சாவடி முகவர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad