தாராபுரம் அருகே எல்லீஸ் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவம் தொடர்பாக இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தாராபுரம் எல்லீஸ் நகரில் சேதுபதி என்பவரின் வாடகை வீட்டில் குடியிருந்து வரும் பிரவீன் குமார் என்பவர், கடந்த 30.09.2025 அன்று காலை கோவைக்கு சென்று விட்டு இரவு சுமார் 11 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன் கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு, வீட்டிற்குள் இருந்த பீரோவில் வைத்திருந்த துணிகள் கலைக்கப்பட்டு, ரூ.7,500 ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பிரவீன் குமார் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தாராபுரம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் சரவணன் தலைமையில் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கௌதம் (த/பெ லிங்கமுத்து), கோட்டூர் பொங்காளியூர், கோட்டூர் (பி.ஒ), ஆனைமலை, பொள்ளாச்சி மற்றும் கார்த்திகேயன் (24) (த/பெ செல்வராஜ்), பொம்மை நாயக்கர் வீதி, பேரூர் செட்டிபாளையம், கோவை மாவட்டம் ஆகிய இருவரும் திருட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, குற்றச்சாட்டாளர்கள் இருவரையும் காவல்துறையினர் இன்று 27.12.2025 காலை கைது செய்து, உடுமலை நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர் செய்தனர். பின்னர் அவர்கள் தாராபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த கைது நடவடிக்கை தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக