தேரிக்குடியிருப்பு, குதிரை மொழி கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர் வெட்டு திருவிழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 16 டிசம்பர், 2025

தேரிக்குடியிருப்பு, குதிரை மொழி கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர் வெட்டு திருவிழா.

தேரிக்குடியிருப்பு, குதிரை மொழி கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர் வெட்டு திருவிழா. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பு குதிரை மொழி கிராமத்தின் வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற கற்குவேல் அய்யனார் கோவில் உள்ளது. 

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் தொடங்கி  சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது. 

முக்கிய நிகழ்ச்சியான கள்ளர் வெட்டு இன்று நடைபெற்றது. காலை 6.00 மணிக்கு கற்குவேல் அய்யனாருக்கு அபிஷேக பால் குடங்கள் ஊர்வலம், காலை 7.00 மணிக்கு பேச்சியம்மன் உற்சவர் ஊஞ்சல் சேவை, காலை 9.00 மணிக்கு அன்னை பூர்ண பொற்கலை சமேத கற்குவேல் அய்யனார், பேச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தாமிரபரணி தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. 

காலை 9.45 மணிக்கு ஊர் எல்லையில் இருந்து முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. மாலை 4.45 மணிக்கு கோவிலுக்கு பின்புறம் உள்ள செம்மணல் தேரியில் பிரசித்திப் பெற்ற கள்ளர் வெட்டு நடந்தது.அய்யனார் குதிரை மீது அமர்ந்து, கள்ளர்களை வேட்டையாடுவதைக் குறிக்கும் வகையில், சிவப்பு மணல் குன்றின் மீது அரிவாளால் இளநீரைக் வெட்டப்பட்டது.  
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து அந்த மண்ணை போட்டி போட்டு அள்ளினர்.  விழாவையொட்டி திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

விழா ஏற்பாடுகளை  இந்து சமய அறநிலையத்துறைஇணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் செல்வி, ஆய்வர் முத்து மாரியம்மாள், செயல் அலுவலர் காந்திமதி, அறங்காவலர் குழு தலைவர் பாலசுப்பிரமணியம், அறங்காவலர்கள் குமார் ,பிரபா, முருகப்பெருமாள், முத்துக்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad