வேலூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் தலைமையில் நடைபெற்ற
மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம்!
வேலூர் , டிச 12
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (12.12.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ. மயில்வாகனன், தலைமையில், மாதாந்திர குற்ற கலந் தாய்வுக் கூட்டம் (Monthly Crime Review Meeting) நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல் நிலையத்திற்கு வரும் புகார் மனுக்கள் மீது விரைந்து நடைவடிக்கை எடுக்க வேண்டும். கொலை, கொள்ளை, லாட்டரி, சூதாட்டம் மற்றும் மணல் திருட்டு, போதைப்பொருட்கள் விற்பனை, மற்றும் சட்டவிரோத மதுபாட்டில் விற் பனை போன்ற குற்றங்களை முழுமை யாக தடுக்க குற்றவாளிகள் மீது கடுமை யாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் வழக்கமான குற்றவாளிகள், ரவுடிகள் தொடர்ந்து கண்காணிக்கபட வேண்டும். தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை மட்டுமே குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட வேண்டும். நிலுவையிலுள்ள குற்ற பத்திரிக்கை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். மதுவிலக்கு, கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை முழுவதுமாக தடுக்க, மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய சந்திப்புகள், ஏ.டி.எம். மைபங்கள் மற்றும் நகைக்கடைகள் உள்ள பகுதி களில் CCTV கேமராக்களைஅதிகப்படுத்து வதோடு பகல் மற்றும் இரவு ரோந்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். சைபர் க்ரைம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், SC/ST வழக்குகள் குறித்தும், காவல் நிலையங்களில் பெறப்படும் புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கடந்த மாதம் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை பாராட்டி கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக