ஆத்தூர் அருகே பைக் மீது கார் மோதி கூலி தொழிலாளி படுகாயம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 23 டிசம்பர், 2025

ஆத்தூர் அருகே பைக் மீது கார் மோதி கூலி தொழிலாளி படுகாயம்.

ஆத்தூர் அருகே பைக் மீது கார் மோதி கூலி தொழிலாளி படுகாயம்.

ஏரல் அருகே நெடுங்கரையைச் சேர்ந்த சிதம்பரத்தின் மகன் கணபதி சங்கர் (33). சாகுபுரம் தனியார் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வரும் இவர் நேற்று முன் தினம் மாலை 3.30 மணியளவில் வேலைக்காக பைக்கில் வந்து கொண்டிருந்தார். 

தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஆத்தூர் அடுத்த கீரனூர் பகுதியில் வந்தபோது திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த கார். இவரது பைக் மீது வேகமாக மோதியது. 

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கணபதி சங்கரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் கார் முன் பகுதி மற்றும் பைக் பலத்த சேதமடைந்தது. விபத்து குறித்து கணபதி சங்கரின் மனைவி பிரியதர்ஷினி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த ஆத்தூர் போலீசார், விபத்து ஏற்படுத்திய சேலம் மாவட்டம், வளைய செட்டிபாளையத்தைச் சேர்ந்த ராமசாமியின் மகன் அர்ஜுனன் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 

முதற்கட்ட விசாரணையில் இவர் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பி ஊருக்கு செல்லும் வழியில் விபத்து நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad