காயல்பட்டினம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும், பல்வேறு பதிவுகள் பதிவுத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது தமிழகம் முழுவதும் இணையத்தில் தான் பதிவு துறை செயல்பட்டு வருகிறது. நேற்றும் இன்றும் அதாவது டிசம்பர் 22 மற்றும் 23 ஆகிய இரு தினங்களாக பதிவு துறை இணையத்தளம் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால் பதிவு துறைக்கு வரும் பயனாளிகள் பத்திர பதிவு உள்ளிட்ட எவ்வித பணிகளும் மேற்கொள்ள முடியாமல் பெரிதும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.
ஏற்கனவே இது குறித்து முன்னறிவிப்பு இருந்திருந்தால் பொது மக்கள், பதிவு துறைக்கு வரும் பயனாளிகள் பாதிப்பு அடைந்திருக்க மாட்டார்கள்.
மேலும் இது பற்றி காயல்பட்டினம் பதிவு துறை அலுவலர்களிடம் கேட்ட போது பதில் கூற முடியாமல் திணறினர். இந்த பிரச்சனை இங்கு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ளது என்பது செவி வழி செய்தியாக பரவி வருகிறது.
எனவே தமிழக அரசின் பதிவு துறை தலைவர் முறையாக முன்னறிவிப்பு கொடுத்து பதிவு துறைக்கு வரும் பயனாளிகள் பாதிப்பு அடையாமல் இருக்க வழி செய்ய வேண்டும் என பல்வேறு சமூக அமைப்புகளில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக