குமரி. சட்டவிரோத கல்குவாரியை திடீர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து இயற்கையின் பாதுகாவலனாக மாறிய மாவட்ட எஸ்பி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 23 டிசம்பர், 2025

குமரி. சட்டவிரோத கல்குவாரியை திடீர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து இயற்கையின் பாதுகாவலனாக மாறிய மாவட்ட எஸ்பி.

குமரி. சட்டவிரோத கல்குவாரியை திடீர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து இயற்கையின் பாதுகாவலனாக மாறிய மாவட்ட எஸ்பி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியர் சட்டவிரோத கல்குவாரிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. 

அதை நிரூபிக்கும் விதமாக நட்டாலம் பகுதியில் சட்டவிரோதமாக கல்குவாரி செயல்பட்டு வருவதாகவும் அதை தடை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் நடந்தது. அதில் மாவட்ட ஆட்சியர் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று செய்திகளும் வெளியானது. இந்நிலையில் நட்டாலம் கல்குவாரியில் மாவட்ட எஸ்பி டாக்டர் ஸ்டாலின் ஐபிஎஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து எச்சரிக்கை விடுத்து இருந்தார். 

அதன் பின்னர் அந்த கல்குவாரியின் செயல்பாடுகள் மாவட்ட எஸ்பி யின் நடவடிக்கையால் தற்போது முடக்கப்பட்டு உள்ளது. 

இந்நிலையில் மாவட்ட ஆட்சியராக நாகராஜன் இருந்த போது சட்ட விரோத கல்குவாரிகளை மூடுவதற்காகவும் உரிய அனுமதியின்றி நடைபெற்று வருவதால் நடவடிக்கை எடுக்க கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதன் விளைவாக அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த நாகராஜன் ஐ ஏ எஸ் 28 கல்குவாரிகளையும் மூடி 31 கோடி ரூபாய் அபராதம் விதித்திருப்பதாக உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். 

அந்த 28 கல்குவாரிகளில் ஒன்று மேற்படி களியல் அருகே கட்டச்சல் பகுதியில் செயல்பட்டு வந்த கல்குவாரி ஆகும். ஆனால் கல்குவாரிகளுக்கு ஆட்சியர் விதித்த அபராத தொகைகள் இதுவரையும் வசூலிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதன்பின்னரும் அவ்வப்போது தொடர்ந்து குமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக கல்குவாரிகள் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. மாவட்ட ஆட்சியர்களிடம் புகார் மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில்
களியல் அருகே கட்டச்சல் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல் குவாரியை ஏற்கனவே மூடிய நிலையில் தற்போது குமரியை சேர்ந்த குவாரி உரிமையாளர் ஒருவர் மூலம் மீண்டும் செயல்பட துவங்கியது. 

குறிப்பாக அப்பகுதியில் பாறைகள் உடைக்க அனுமதி இல்லாத நிலையில், அங்கு சட்ட விரோதமாக பாறைகள் உடைப்பதாக புகார் எழுந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், கல் குவாரியில் அதிரடியாக நடத்திய சோதனையில் குவாரி மேற்பார்வையாளர் ஸ்டாலின் என்பவரை கைது செய்தார். 

மேலும் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் உடந்தையாக இருந்த கடையாலுமூடு காவல் நிலையத்தை சேர்ந்த இரண்டு காவலர்களை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்தும் எஸ்பி உத்தரவிட்டதன் மூலம் பொதுமக்களின் மத்தியில் தன்னை இயற்கையின் பாதுகாவலனாகவும் நிரூபித்து உள்ளது குமரி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. 
மேலும் இரவு நேரங்களில் மாவட்ட எஸ் பி ஓய்வுக்கு செல்வதை கவனித்து ஒரு சில போலீசார் கேரளாவுக்கு அதிக பாரத்துடன் சட்ட விரோதமாக கனிம வளங்களை கொண்டு செல்ல அனுமதித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. 

குறிப்பாக கனிம வளங்கள் கொண்டு செல்லும் அறுபது சதவீதத்துக்கு மேற்பட்ட கனரக டாரஸ் லாரிகள் கேரள மாநில பதிவெண்களைக் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காத நிலையிலும் குமரியில் சட்டம் ஒழுங்கு மட்டுமின்றி இயற்கையையும் பாதுகாக்க வேண்டும் என்ற சிறந்த எண்ணத்தில் தனது அதிரடி நடவடிக்கை மூலம் இயற்கையையும் பாதுகாத்து குமரி மக்கள் இயற்கையோடு ஒன்றி வாழும் விதத்தில் மக்கள் மத்தியில் இயற்கை பாதுகாவலனாகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட மாவட்ட எஸ்பிக்கு பொதுமக்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad