குடியாத்தத்தில் சி ஐ டி யு. சார்பில் பழைய பஸ் நிலையத்தில் இன்று காலை மறியல் போராட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 23 டிசம்பர், 2025

குடியாத்தத்தில் சி ஐ டி யு. சார்பில் பழைய பஸ் நிலையத்தில் இன்று காலை மறியல் போராட்டம் !

குடியாத்தத்தில் சி ஐ டி யு. சார்பில் பழைய பஸ் நிலையத்தில் இன்று காலை மறியல் போராட்டம் ! 
குடியாத்தம் , டிச 23 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம்.C.I.T.U. சார்பில் பழைய பஸ் நிலையத்தில் இன்று காலை. பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஒன்றிய மோடிஅரசை கண்டித்து மறியல் போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் சி சரவணன் தலை மை தாங்கினார். பீடி சங்கத் தலைவர் ஆர் மகாதேவன் மாவட்டத் துணைத் தலைவர் பழனியப்பன் கைத்தறி செய லாளர் என் லெனின் கட்டுமானம் எம் ராஜா ஆகியோர் முன்னில வகித்தனர். 
இதில் மறியல் நோக்கங்களை விளக்கி. கைத்தறி சங்கத் தலைவர் முல்லை வாசன் பிடி சங்க பொருளாளர் எஸ் சிலம்பரசன் ஆட்டோ சங்க பொருளாளர் ஐ கார்த்திகேயன் ஆகியோர்  விளக்க 
உரையாற்றினார்கள் தொழிலாளருக்கு எதிராக அமுல்படுத்தி உள்ள நான்கு சட்ட தொகுப்பை வாபஸ் வாங்கு பீடி தொழி லாளர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்க 1966 பீடி சுருட்டும் தொழிலாளர்கள் சட்டத்தை நீர்த்து போகாமல் மோடி அரசை கண்டித்து  சிறு குறு தொழில்களை பாது காக்க விலைவாசி உயர்வை கட்டுப் படுத்த வேண்டும் உள்ளிட்ட கோஷங்களு டன் மறியலில் ஈடுபட்டனர்  இதில் 7 பெண்கள் உள்பட 46 நபர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்ட பத்தில் தங்க வைத்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad