அறிஞர் அண்ணா அரசினர் மகளிர்கலை கல்லூரியில் ஆண்டு விழா முன்னிட்டு தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா !
ராணிப்பேட்டை , டிச 24-
இராணிப்பேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை கல்லூரியில் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு குழு மற்றும் தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவி களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் தலைமை யேற்று கலந்துகொண்டார்.
கல்லூரி முதல்வர் முனைவர் சே.ப. நசீம் ஜான் அவர்கள் முன்னிலை வகித்தார். முனைவர் R இந்துமதி, உடற்கல்வி இயக்குநர் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவிகளை பாராட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக