தூத்துக்குடியில் பா.ஜ.க சார்பில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் பயிலரங்க மாநாடு நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 16 டிசம்பர், 2025

தூத்துக்குடியில் பா.ஜ.க சார்பில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் பயிலரங்க மாநாடு நடைபெற்றது.

தூத்துக்குடியில் பா.ஜ.க சார்பில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் பயிலரங்க மாநாடு நடைபெற்றது.

டிச.16- தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தூத்துக்குடியில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சட்டமன்ற தொகுதி பயிலரங்கு மற்றும் மாநாடு நடைபெற்றது.

மேலும் கூட்டத்திற்கு தளபதி ராஜா மற்றும் மாவட்டத் தலைவர் சித்திராங்கதன் ஆகியோர் தலைமை தாங்கி, சிறப்புரையாற்றி, ஆலோசனைகளை வழங்கினர். இதையடுத்து, முன்னாள் மாவட்டச் செயலாளர் அம்பாசமுத்திரம் பேரவை அமைப்பாளர் தங்கேஸ்வரன், விருதுநகர் கிழக்கு மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் ஆகியோர் சிறப்புரையாற்றிப் பேசினர்.

பின்னர், ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்த்தல், நீக்குதல் மற்றும் முகவரிகளைத் திருத்துதல் போன்ற பணிகளை வாக்குச் சாவடி மட்டத்திற்கு எடுத்துச் சென்று, தகுதியான வாக்காளர்கள் யாரும் தவறவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் மாவட்டப் பொருளாளர் கே.என்.ஆர். பரமசிவன், மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன், முன்னாள் மாவட்ட பொருளாளர் வக்கீல் சண்முகசுந்தரம், மாவட்ட துணை தலைவர்கள் வக்கீல் வாரியார், சிவராமன், மாசானம், மாவட்ட அலுவலக செயலாளர் இசக்கிமுத்து, கோட்ட தலைவர்கள் லிங்கசெல்வம், சுதா, ராஜேஷ்கனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநில கோட்ட நிர்வாகிகள், மாவட்ட அணி பிரிவு நிர்வாகிகள், மற்றும் பலர் பயிலரங்கு மற்றும் மாநாட்டில் பங்கேற்றனர்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad