வாலாஜாவில் இந்து மக்கள் கட்சி சார் பில் திருக்கோவிலில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 22 டிசம்பர், 2025

வாலாஜாவில் இந்து மக்கள் கட்சி சார் பில் திருக்கோவிலில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி !

வாலாஜாவில் இந்து மக்கள் கட்சி சார்பில் திருக்கோவிலில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி !
ராணிப்பேட்டை ,டிச 22 -

ராணிப்பேட்டை மாவட்டம் இந்து மக்கள் கட்சி வாலாஜா நகரத்தின் சார்பாக ஆறுமுக சுவாமி சித்தர் திருக்கோவிலில் திருப்பரங்குன்றம் மலையின் மீது கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் அனுமதி வழங்கியும் தீபம் ஏற்றாததால் பூரண சந்திரன் முருக பக்தர் என்பவர் தீக்குளித்து தன்னை மாய்த்துக் கொண் டார் அவருடைய ஆன்மா சாந்தி யடைய  வாலாஜா பேட்டை ஆறுமுக சுவாமி சித்தர் திருக்கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப் பட்டது.இந்து மக்கள் கட்சி சார்பாக வேலூர் கோட்ட தலைவர்கள் எஸ் கே மோகன் தலைமையில் ஏற்றப்பட்டது கட்சி நிர்வாகிகள் தாய்மார்கள் குழந்தை கள் என கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இந்த அஞ்சலி நிகழ்ச்சி யில் ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் ஸ்ரீதர் வாலாஜா அம்மூர் பேரூராட்சி தலைவர் ஐயப்பன்.வாலாஜா. ஒன்றிய தலைவர் கணேசன், வாலாஜா நகர இளைஞர் அணி தலைவர் கிருஷ்ண குமார் வாலாஜா நகர துணை தலைவர் சத்யநாராயணன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். குழந்தைகள் தாய்மார்கள் முருக பக்தர்கள் கலந்து கொண்டனர் .

சிறப்பு மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad