திருப்பத்தூரில் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கக் கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் , டிச 13 -
திருப்பத்தூர் மாவட்டம் வன்னியர்களுக் கான 10. 5 சதவீத இட ஒதுக்கீட்டை வலி யுறுத்தியும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த கோரியும் தமிழக அரசை வலி யுறுத்தி பாமக சார்பில் திருப்பத்தூரில் உள்ள மாதவர் ஸ்டேட் வங்கி எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, மாவட்ட செயலாளர் கே ஜி அக்னி விஜயகுமார் தலைமை தாங்கினார் மாவட்டத் தலைவர் பி கே பிரகாசம் வரவேற்றார் மாநிலத் துணைத் தலைவர் ஜெயம் சுரேஷ் ராஜன், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் அசோக் குமார் மற்றும் மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் கோ காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர், சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளர் சேலம் ஸ்ரீ சதா சிவம் கலந்து கொண்ட கண்டன ஆர்ப் பாட்டத்தை தொடங்கி வைத்தார், நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் அனுமுத்தன், மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் தொகுதி பொறுப் பாளர் சா விக்னேஷ், ஊடகப் பேரவை செயலாளர் மோ. அண்ணாமலை மற்றும் கட்சி தொண்டர்கள் உறுப்பினர்கள் பொதுமக்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக