மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள், சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2 ஆவது கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்ததைதொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டம் ஈச்சனாரி கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் 50,648 மகளிர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற வங்கி பற்று அட்டைகளை (Atm) card வழங்கினார்.
---------------------------------------------------------------------------------------
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (12.12.2025) நடைபெற்ற அரசு விழாவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2 ஆவது கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்ததைதொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டம் ஈச்சனாரி கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் 50,648 மகளிர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற வங்கி பற்று அட்டைகளை (Atm) card வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி திரு.என்.சிவா அவர்கள், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க. ஈஸ்வரசாமி அவர்கள், மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமசந்திரன், தூய்மைப்பணியாளர் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி திரு.வெ.ஆறுச்சாமி, துணைத்தலைவர் திருமதி.கனிமொழி, மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுருபிரபாகரன் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.நாராயணன், உதவி ஆட்சியர் பயிற்சி மரு.பிரசாந்த் இ.ஆ.ப., மாநகராட்சி துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், தனித்துணை ஆட்சியர் திருமதி.வாணிலெட்சுமி ஜெகதம்மாள், மாநகராட்சி பணிகள் குழுத் தலைவர்கள் திருமதி.சாந்திமுருகன், மண்டலக்குழுத் தலைவர் (மேற்கு) திருமதி.தெய்வானை தமிழ்மறை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.ஜிதேந்திர குமார், வருவாய் கோட்டாட்சியர்(தெற்கு) திருமதி.மாருதிபிரியா, மதுக்கரை வட்டாட்சியர் திரு.வேல்முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 40239 மகளிருக்கும், கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 5695 மகளிருக்கும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 68137 மகளிருக்கும், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 24,800 மகளிருக்கும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 62,113 மகளிருக்கும், சூலூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 45,311 மகளிருக்கும், மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 50,558 மகளிருக்கும், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 56,627 மகளிருக்கும், பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 34,355 மகளிருக்கும், வால்பாறை சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 37,870 மகளிருக்கும், என மொத்தம் 4,25,705 மகளிருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.1000/- வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.510.84 கோடி தொகையானது வழங்கப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்டமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த ஜீலை மாதம் முதல் நடத்தப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்களின் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கோரிய 1,74,599 விண்ணப்பங்களை கள ஆய்வு செய்து ஆனைமலை வட்டாரத்தில் 3253 மகளிருக்கு ரூ.3.90 கோடி மதிப்பிலும், அன்னூர் வட்டாரத்தில் 2801 மகளிருக்கு ரூ.3.36 கோடி மதிப்பிலும், கோயம்புத்தூர் வடக்கு வட்டாரத்தில் 12,548 மகளிருக்கு ரூ.15.05 கோடி மதிப்பிலும், கோயம்புத்தூர் தெற்கு வட்டாரத்தில் 5360 மகளிருக்கு ரூ.6.43 கோடி மதிப்பிலும், கிணத்துக்கடவு வட்டாரத்தில் 1547 மகளிருக்கு ரூ.1.85 கோடி மதிப்பிலும், மதுக்கரை வட்டாரத்தில் 5265 மகளிருக்கு ரூ.6.31 கோடி மதிப்பிலும், மேட்டுப்பாளையம் வட்டாரத்தில் 3800 மகளிருக்கு ரூ.4.56 கோடி மதிப்பிலும், பேரூர் வட்டாரத்தில் 4929 கோடி மதிப்பிலும், பொள்ளாச்சி வட்டாரத்தில் 4191 கோடி மதிப்பிலும், சூலூர் வட்டாரத்தில் 6190 மகளிருக்கு ரூ.7.42 கோடி மதிப்பிலும், வால்பாறை வட்டாரத்தில் 764 மகளிருக்கு ரூ.91.68 இலட்சம் மதிப்பிலும் என மொத்தம் 50,648 மகளிருக்கு தற்போது இரண்டாம் கட்டமாக மாதம் ரூ.1000/- வீதம் ஒரு மாதத்திற்கு ரூ.5.06 கோடி வீதமும் ஆண்டிற்கு ரூ.60.77 கோடி மகளிர் உரிமைத்தொகை அவர்களது வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் முதல் மற்றும் இரண்டாம் கட்டம் என மொத்தம் 4,76,353 மகளிருக்கு மாதம் ரூ.1000/- வீதம் ஒரு மாதத்திற்கு ரூ.47.63 கோடி தொகையும், ஒரு ஆண்டிற்கு ரூ.571 கோடி தொகையானது வழங்கப்படுகிறது.
தமிழக குரலுக்காக கோவை மாவட்ட ஒளிப்பதிவாளர் கார்த்திக்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக