காரமடை வட்டாரத்தில் ஊட்டச்சத்து தானியங்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 13 டிசம்பர், 2025

காரமடை வட்டாரத்தில் ஊட்டச்சத்து தானியங்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்



கோவை மாவட்டம் காரமடை வட்டாரத்தில், தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் ஊட்டச்சத்து தானியங்கள் தொடர்பான திட்ட விளக்க பிரச்சார ஊர்தி இன்று வட்டாரத்தின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் சென்றது.


விவசாயிகளுக்கு ஊட்டமிரு (மில்லெட்) தானியங்களின் பயன்கள், சிறப்பியல்புகள், மேலும் அதிக மகசூல் பெற தேவையான நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.


இந்த பிரச்சார நிகழ்ச்சியை காரமடை வட்டார வேளாண் உதவி இயக்குநர் திருமதி பாக்கியலட்சுமி அவர்கள் துவக்கி வைத்து, விவசாயிகள் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கும், நிலையான வேளாண்மை முறைகளுக்கும் ஊட்டச்சத்து தானியங்கள் வழங்கும் பலனை விளக்கினார்.



விவசாய சமூகத்தில் ஊட்டச்சத்து தானிய விளைச்சலை அதிகரித்து, ஆரோக்கியமான உணவு பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.



 தமிழக குரலுக்காக கோவை மாவட்ட ஒளிப்பதிவாளர் கார்த்திக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad