ஏழை மக்களின் நலன் கருதி பல்வேறு சேவைகளை செய்த ஒப்பற்ற மருத்துவர் பிரான்சிஸ் ராய் நினைவாக, பாளையங்கோட்டையில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி பல்நோக்கு மருத்துவமனையில் மெகா ஆர்த்தோ மற்றும் பிசியோதெரபி இலவச மருத்துவ முகாம் டிசம்பர் மாதம் 12 13 14 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
ரூபாய் 5000 மதிப்புள்ள எலும்பு அடர்த்தி பரிசோதனை, முடக்கு வாத யூரிக் அமிலம் பரிசோதனை, எலும்பு மருத்துவரின் சிறப்பு ஆலோசனை, தேவைப்படுவோருக்கு எக்ஸ்ரே மற்றும் பிசியோதெரபி ஆகியவை இந்த இலவச மருத்துவ முகாமில் வழங்கப்படுகிறது.
இந்த மருத்துவ முகாமினை மூத்த மருத்துவர் அபூபக்கர், தொழிலதிபர் முகமது ரியாஸ் மற்றும் ஜெரால்ட் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
இந்த மருத்துவ முகாமில் அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனை இயக்குனர்கள் மருத்துவர்கள் ஜி.ஜி செல்வன், மருத்துவர் அந்தோணி ராஜ், மருத்துவர் வாணிராய், மருத்துவர் பானுமதி ராஜ் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ஏராளமான பொதுமக்களும் முதல் நாள் முகாமிலேயே கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதேபோல் சனி ஞாயிறு என இந்த இரண்டு விடுமுறை நாட்களையும் மக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களுக்கான பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்த இலவச மருத்துவ முகாமில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக